Daily Current Affairs 19 November 2021 in Tamil

0
Daily Current Affairs 19 November 2021 in Tamil
Daily Current Affairs 19 November 2021 in Tamil

Daily Current Affairs 19 November 2021 in Tamil

சல்மான் கானை கோவிட் தடுப்பூசி தூதராக மகாராஷ்டிர அரசு நியமிக்க உள்ளது

  • மகாராஷ்டிராவின் கோவிட்-தடுப்பூசி தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் வரவுள்ளார்.
  • முஸ்லீம் பெரும்பான்மை சமூகங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பூசிகளைப் பெறுவதில் தயக்கம் உள்ளது, என்று மகாராஷ்டிரா பொது சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறுகிறார்.
  • மேலும் மக்களுக்கு தடுப்பூசியைப் பற்றி விழிப்புணர்வு தருவதற்கு பாலிவுட் நடிகர் சல்மான் கானின் உதவியை அரசாங்கம் நாடவுள்ளது.

KVG வங்கி  சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைக்கான ASSOCHAM விருதை  பெற்றுள்ளது

  • கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி   சிறந்த ‘டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான’ விருதை  ASSOCHAM மூலம்   பிராந்திய கிராமப்புற வங்கிகள்’ (RRBs) பிரிவின் கீழ்,  பெற்றுள்ளது
  • இந்த விருதை வங்கியின் தலைவரானா பி.கோபிகிருஷ்ணா இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஆர்.குருமூர்த்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
  • நடந்த இடம் : பெங்களூர்

கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கிக்கான பிற விவரங்கள்

  • நிறுவப்பட்டது: 2005;
  • தலைமையகம்: தரவாடு, கர்நாடகா;
  • தலைவர்: பி.கோபிகிருஷ்ணா.

உலக கழிப்பறை தினம் – நவம்பர் 19

  • உலக கழிப்பறை தினம் என்பது முன்கள பணியாளர்களுக்காக கொண்டாடுவதாகும். .அவர்கள் நமக்காக செய்யும் அனைத்திற்கும் – நமது கழிவுகளை அகற்றுவது முதல் நமது ஆரோக்கியம், பாதுகாப்பு வரை கொண்டாடுவதாகும்.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் தேதியை உலக உலக கழிப்பறை தினமாக நியமித்தது, கழிப்பறைகளின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவதும், உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • கழிப்பறை இல்லாத வாழ்க்கை அழுக்காகவும், ஆபத்தானதாகவும் இருக்கும்.

ஆசிய வில்வித்தையில் தங்கம் வென்றார் ஜோதி

  • வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடந்த் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஜோதி சுரேகா
  • இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு அரை இறுதி சுற்றில் ,தென் கொரியாவின் கிம் யங்கீயை   எதிர்த்து இந்தியாவின் ஜோதிசுரேகா விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 148-144 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றிற்கு நுழைந்தார்.
  • இறுதி சுற்றில் , முன்னாள் உலக சாம்பியனான கொரியாவின் ஓ யூஹ்யூனை எதிர்த்து இந்தியாவின் ஜோதிசுரேகா விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 146-145 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்

  • மூத்த நீதிபதியான எம்.துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாதாக . சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது
  • சென்னை உயர் நீதி மன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதியான  சஞ்சிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைவராக மாற்றப்பட்டார்
  • நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் , நீதிபதி பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேர்ந்தவுடன், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக செயல்படுவார்

ED தலைவர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு

  • மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் உத்தரவின் படி அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐஆர்எஸ், , அமலாக்க இயக்குநராக உள்ள ஸ்ரீ சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை 18.11.2021க்குப் பிறகு ஓராண்டுக்கு 18.11.2022 அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிப்பதாக இந்தியக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

7,287 கிராமங்களில் மொபைல் சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள 44 ஆர்வமுள்ள மாவட்டங்களின் 7,287 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4g மொபைல் சேவைகள்
  • ₹6,466 கோடி மதிப்பீட்டில். வழங்கபடுகிறது
  • யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டம் ஒப்பந்தம் கையெழுத்தான 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

ஹேமமாலினிக்கு சிறந்த திரைப்பட ஆளுமைக்கான விருது

  • சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் இந்திய திரைப்பட தணிக்கை குழு தலைவரும், பிரபல பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷிக்கும் ​அறிவிக்கப்பட்டு உள்ளது
  • மேலும் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது
  • கோவாவில் நடைபெற இருக்கும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில், இவர்கள் இருவருக்கும் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகிறார்

சர்வதேச ஆண்கள் தினம் – நவம்பர் 19

  • சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டு இந்த தினத்தின் கருப்பொருள் “ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சிறந்த உறவுகள்” என்பதாகும்.
  • சர்வதேச ஆண்கள் தினம் ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தவும், நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை ஊக்குவிக்கவும் கொண்டாடபடுகிறது
  • சர்வதேச ஆண்கள் தினத்தின் நோக்கம் ஆண்களுக்கு எதிரான பாகுபாடுகளில் கவனம் செலுத்துவதும், அனைவருக்கும் சிறந்த மற்றும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதன் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதும் ஆகும்.
  • 1999 ஆம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினம் டாக்டர் ஜெரோம் டீலக்சிங்கால் உருவாக்கபட்டது . தனது தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 19 ஐ சர்வதேச ஆண்கள் தினமாக தேர்ந்தெடுத்தார்.

தமிழ்நாட்டில் ’நம்மை காக்கும் 48 ’திட்டம்  : அறிகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் “நம்மை காக்கும் 48” என்ற புதிய திட்டத்தைத் அறிவித்துள்ளார்
  • Gloden hours எனப்படும் சிகிச்சை சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு  முதல் சில மணி நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை ,இது   உயிரைக் காப்பாற்ற  முக்கியமான சிகிச்சை ஆகும்
  • முதல்வர் ஸ்டாலின் நம்மை காக்கும் 48 என்ற புதிய  திட்டத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே பொறுப்பேற்க்கும் என  அறிவித்துள்ளார்.

வ .உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவில் தமிழக முதல்வர் வ .உ.சி  நூல்களை வெளியிட்டார்

  • கப்பலோட்டிய தமிழனாக போற்றப்படும் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வ.உ.சி. பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை ஆகிய நூல்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 18.11.2021 அன்று   தலைமைச் செயலகத்தில், விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வ.உ.சி. பன்னூல் திரட்டு – முதல் தொகுதி மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.

லடாக்கில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடம்:  திறந்து வைத்தார் பாதுகாப்பு அமைச்சர்

  • 1962 நவம்பர் 18-ல் கிழக்கு லடாக்கின் ரெசாங் லா பகுதியில் சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய போர் நடந்தது. 18,000 அடி உயரத்தில் நடந்த இப்போரில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான குமாவுன் படைப் பிரிவினர் துணிவுடன் போராடினர்.
  • ஷைத்தான் சிங் வீரமரணம் அடைந்தார். நாட்டின் மிக உயரிய பரம் வீர் சக்ரா விருது மறைவுக்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது.
  • ரெசாங் லா போரின் 59-வது நினைவு தினத்தைமுன்னிட்டு, அங்கு புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்துவைத்தார்.

தமிழக  அரசு வேலை: 3 % ஒதுக்கீட்டு பட்டியலில் சிலம்பாட்ட வீரா்களுக்கு இடம்பெற்றனா்

  • சிலம்பாட்ட வீரா்களுக்கு 3 % ஒதுக்கீட்டு அடிப்படையில்  அரசு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
  • 40 ஆண்டுகளுக்கு முன்பே மாநில விளையாட்டுகளில் ஒன்றாக சிலம்பத்தை அரசு அங்கீகரித்துள்ளது

சுய் கிராமத்தில் பல்வேறு பொது வசதிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்

  • ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் பல்வேறு பொது வசதிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • ஸ்வா-ப்ரீரிட் ஆதர்ஷ் கிராம் யோஜனா (SPAGY) திட்ட த்தால் மகாதேவி பரமேஸ்வரிதாஸ் ஜிண்டால் அறக்கட்டளை மூலம் ஆதர்ஷ் கிராமமாக (மாதிரி கிராமம்) உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • ஜிண்டால் அறக்கட்டளை சுய் நகரை ஆதர்ஷ் கிராமமாக மாற்ற 25 கோடி ரூபாய் செலவிட்டடுள்ளது

552வது குருநானக் ஜெயந்தி 19 நவம்பர் 2021 அன்று கொண்டாடப்படுகிறது

  • சீக்கிய நிறுவனர் குருநானக் தேவ் ஜியின் பிறந்த நாளை குருநானக் ஜெயந்தி, தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு பிரகாஷ் உத்சவ் அல்லது குரு புரப் என்றும் அழைக்கப்படும் குரு நானக்கின் 552 வது பிறந்தநாள் ஆகும்.
  • இது சீக்கிய சமூகத்திற்கு ஒரு முக்கியமான பண்டிகையாகும்.
  • 1469 இல் தல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அது  தற்போது பாகிஸ்தானின் நங்கனா சாஹிப்பில் அமைந்துள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!