Daily Current Affairs 18 November 2021 in Tamil

0
Daily Current Affairs 18 November 2021 in Tamil
Daily Current Affairs 18 November 2021 in Tamil

Daily Current Affairs 18 November 2021 in Tamil

வடகிழக்கு பிராந்தியத்தின் பிராண்ட் தூதராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்

  • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையான எம்.சி.மேரி கோம், வடகிழக்கு பிராந்தியத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலகப் பெண் குத்துச்சண்டை வீரர்களில் 4 ஆவது இடத்தில் இவர் காணப்படுகிறார்
  • இந்தியாவில் முதல்முறையாக உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற பெருமை மேரி கோம்மையே சாரும்
  • 2013 இல் அவர் தனது சுயசரிதையை அன்பிரேக்கபிள் என்ற பெயரில் வெளியிட்டார்

விருதுகள்

  • பத்ம விபூசண் – 2020
  • அர்ஜுனா விருது – 2004
  • பத்மசிறீ விருது – 2006
  • ராஜுவ்காந்தி கேல் ரத்னா விருது – 2009

திரு. அனுராக் தாக்கூர்  இந்திய விளையாட்டு ஆணையத்தின் முதலாவது  விருதுகளை  வழங்கினார்.

  • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை 246 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழங்கினார்
  • தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய 162 வீரர்கள் மற்றும் 84 பயிற்சியாளர்களுக்கு புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுகள் மற்றும் ரூ.85.02 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயாவிற்கு மாற்றம்

  • குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவுபடி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியான சஞ்சிப் பானர்ஜி மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றபட்டர்
  • இதற்க்கு முன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2006ஆம் ஆண்டு சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 17  – தேசிய வலிப்பு நோய் தினம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று தேசிய வலிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது

வலிப்பு நோய்  தினத்தின் நோக்கம், மூளையின் செயல்பாடு அசாதாரணமாக இருக்கும் ஒரு நரம்பியல் கோளாறான வலிப்பு நோய் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாகும்.

நவம்பர் 18  – உலக தத்துவ தினம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 அன்று உலக தத்துவ தினம் அனுசரிக்கப்படுகிறது

2005 இல் யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஒவ்வாரு நவம்பர் மாதம் மூன்றாவது வியாழன். அன்று உலக தத்துவ தினம் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது

Philosophy என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான phílosophía என்பதிலிருந்து வந்தது, அதன் பொருள் ‘ஞானத்தின் அன்பு.

ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடைமுறை: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்

17.11.2021 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற 82வது அகில இந்திய சட்டப் பேரவைத் தலைவர் மாநாட்டின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே நாட்டில் ஒரே சட்ட பேரவை இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடைமுறையை’ பிரதமா் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.  மேலும் இது இந்திய  நாடாளுமன்ற நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை அளிக்கும் என்பதுடன் , நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கவும் உதவும்.

ASER 2021 அறிக்கையை வழங்கியது

பிரதம் அறக்கட்டளை 16வது ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) 2021 நவம்பர் 17, 2021 அன்று வெளியிட்டது

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு வடிவமைப்பை தொலைபேசி அடிப்படையிலான   ASER பின்பற்றியது.

அறிக்கையின்படி, 2018 மற்றும் 2020 க்கு இடையில் அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் விகிதம் 64.3% இல் இருந்து 65.8% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 2021 இல், சேர்க்கை 70.3% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது. 2020 இல் 28.8% ஆக இருந்த பதிவு விகிதம் 2021 இல் 24.4% ஆகக் குறைந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில்  ‘Ration Aapke Gram’ திட்டம் மற்றும் ‘Sickle Cell Mission’ ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

  • பிரதமர் நரேந்திர மோடி தனது மத்தியப் பிரதேச பயணத்தின்போது பழங்குடியினர் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் மத்தியப் பிரதேசத்தின் ‘Ration Aapke Gram’ திட்டம் & ‘Sickle Cell Mission’ என்ற பெயரில் ஒரு நலத் திட்டத்தையும் தொடங்கினார்.
  • மத்தியப் பிரதேச தலைநகரம்: போபால்
  • மத்தியப் பிரதேச ஆளுநர்: மங்குபாய் சி. படேல்;
  • மத்திய பிரதேச முதல்வர்: சிவராஜ் சிங் சவுகான்
  • மத்தியப் பிரதேச அதிகாரப்பூர்வ மொழி : இந்தி
  • பேசப்படும் மொழி : மராத்தி, பிலி, கோண்டி, கோர்கு, கல்டோ

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்

  • ஐசிசி வாரியக் கூட்டத்தின் போது சௌரவ் கங்குலி ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் பிசிசிஐயின் தலைவரும் ஆவார்.
  • 2012ல் பொறுப்பேற்ற அனில் கும்ப்ளேவுக்குப் பதிலாக அவர் பதவியேற்றார்
  • தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

UBS செக்யூரிட்டீஸ் இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சியை கணித்துள்ளது

UBS செக்யூரிட்டீஸ் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கான GDP வளர்ச்சி விகிதத்தை பின்வருமாறு கணித்துள்ளது:

2021-22க்கு (FY22)= 9.5%

2022-23க்கு (FY23)= 7.7%

2023-24க்கு (FY24)= 6.0%

லஞ்சம் மலிந்த நாடுகளிலே 82-வது இடத்தில இந்திய

உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை , ‘டிரேஸ்’ என்ற அமைப்பு  வெளியி ட்டது.அதில் இந்தியா 82-வது இடத்தில் 44-புள்ளிகளுடன் உள்ளது

44-புள்ளிகளுடன் மேலும் சில நாடுகள் :

  • வனாட்டு தீவுகள்
  • பெரு
  • மாசிடோனியா
  • மாண்டிநீக்ரோ
  • இதே போன்று சென்ற ஆண்டு 77வது இடத்தில் 45-புள்ளிகளுடன் இருந்த இந்தியா இப்போது 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்துக்கு வந்துள்ளது.
  • 130வது 2016இல் இடத்தில் இருந்தது இந்தியா.

UNWTO அமைப்பு இந்தியாவின் பட்டு நகரம் போச்சம்பள்ளியை, உலகின் சிறந்த சுற்றுலா கிராமம் என்று அறிவித்தது

பட்டு நகரம் என்றழைக்கப்படும் யாதாத்ரி புவனேஸ்வர் மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமம் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பினால் (UNWTO) சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள போச்சம்பள்ளி கிராமம், கையால் நெய்யப்பட்ட இகாட் புடவைகலுக்கு புகழ் பெற்றது

இந்த விருது நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை ஸ்பெயின் மாட்ரிட்டில் நடைபெறும் unwto பொதுச் சபையின் 24 வது அமர்வின் போது வழங்கப்படும்

நவம்பர் 17 – சர்வதேச மாணவர் தினம்

சர்வதேச மாணவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று உலகம் முழுவதும் உள்ள மாணவர் சமூகத்தால் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் நோக்கம் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மாணவரும் கல்விக்கான அணுகலை உறுதி செய்வதாகும்

600 ஆண்டுகளுக்கு பிறகு மிக நீண்ட சந்திர கிரகணம்!

  • சந்திர கிரகணம் என்பது சந்திரன் – பூமி – சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது.
  • சந்திர கிரகணம் நிகழும் நேரம் நவம்பர் 19ம் தேதி காலை 11:32:09 மணி முதல் மாலை 17:33:40 (5.33) மணி வரை ஆகும்
  • இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் பார்க்க முடியாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!