Daily Current Affairs 17 November 2021 in Tamil

0
Daily Current Affairs 17 November 2021 in Tamil
Daily Current Affairs 17 November 2021 in Tamil

Daily Current Affairs 17 November 2021 in Tamil

பூர்வாஞ்சல் அதிவேகச்சாலை பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

  • இது லக்னோ மாவட்டத்தில் உள்ள சவுட் சாராய் கிராமத்தில்  தொடங்கி காஜிபூர் மாவட்டத்தில் உள்ள ஹைதாரியா கிராமத்தில் முடிவடைகிறது
  • பூர்வாஞ்சல் அதிவேக சாலையின் நீளம் 340.824 கி.மீ. இது 36 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.
  • இந்த திட்டத்தின் செலவு நிலத்தின் விலையும் சேர்த்து ரூபாய் 22,494.66 கோடி ஆகும்

இந்தியாவின் முதல் மீன்வள காப்பகம் ஹரியானா மாநிலம் குருகிராமில் ரூ. 3.23 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது.

  •  இந்திய நாட்டிலேயே முதல்முறையாக ஹரியானாவின் குருகிராமில் நிறுவப்பட்டுள்ள லினாக்-என்சிடிசி மீன்வள தொழில் வழிகாட்டும் மையத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களால் இன்று  திறந்து வைக்கப்பட்டது .
  • இந்த மையம் ரூ 3.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது .இது மீன் வள நிறுவனங்களை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனையில்  எல்லைப்புற சாலைகள் அமைப்புக்கு அங்கீகாரம்

  • உலகின் மிக உயரமான மோட்டார் வாகன சாலை லடாக்கின் உம்லிங்கா கணவாயில் 19,024 அடி உயரத்தில் அமைத்து எல்லைப்புற சாலைகள் அமைப்பு சாதனை புரிந்துள்ளது.
  • இதனை பாராட்டும் விதமாக எல்லைப்புற சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சவுத்திரிக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழை 2021 நவம்பர் 14 ஆம் தேதி பிரிட்டனை சேர்ந்த  கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ நடுவர் திரு ரிஷிநாத் வழங்கினார்.

தமிழ் திரைப்படமான கூழாங்கல் உள்ளிட்ட 9 படங்கள் ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கான போட்டிக்கு தேர்வு

  •  52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஐசிஎஃப்டி யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
  • இவ்விழா, கோவாவில் நவம்பர் 20 ந்தேதி தொடங்கி 28 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

மம்தா பானர்ஜி “துவரே ரேஷன்” திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்

  •  நவம்பர் 16, 2021 அன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “துவாரே ரேஷன் திட்டம்” அதாவது வீட்டு வாசலில் ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • அரசாங்கம் “காத்யா சதி: அமர் ரேஷன் மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது
  • இத்திட்டத்திற்காக அரசு 160 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

தமிழக முதல்வர் TANCEM இன் ‘வலிமை’ சிமெண்ட் வகையை  அறிமுகப்படுத்தினார்.

  • தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் புதிய ரக சிமெண்ட்டானா ‘வலிமை’யை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
  • தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “வலிமை சிமெண்ட் பிராண்டின் இரண்டு ரகங்களின் விலை ₹350 மற்றும் ₹365 ஆக உள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ரூ.22,000 கோடி மதிப்புள்ள தாக்குதல் விமானங்களை வாங்குகிறது.

  • 3 பில்லியன் டாலர்கள் (ரூ. 22,000 கோடி) செலவில் 30 மல்டி-மிஷன் ஆயுதம் கொண்ட தாக்குதல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்புதல் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • MQ-9B ரக ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளராக ஷொம்பி ஷார்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.

  •  ஐநா பொதுச்செயலாளரானா அன்டோனியோ குட்டரெஸ் அவர்களால்  சர்வதேச வளர்ச்சி நிபுணரானா ஷோம்பி ஷார்ப்பை ,  இந்தியாவில் உள்ள ஐக்கியநாடுகளின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 16  – சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம்

  • சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படுகின்றது.
  • 1995 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 16 ஆம் தேதியை சகிப்புத்தன்மைக்கான தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

 நவம்பர் 16  – தேசிய பத்திரிகை தினம்

  • தேசிய பத்திரிகை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படுகின்றது.
  • இந்தியாவில் சுதந்திர பத்திரிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே தேசிய பத்திரிகை தினத்தின் நோக்கமாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!