மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் புதிய ஃபார்முலாவுடன் DA? கணக்கீடு மாற்றம் & சம்பள விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் புதிய ஃபார்முலாவுடன் DA? கணக்கீடு மாற்றம் & சம்பள விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் புதிய ஃபார்முலாவுடன் DA? கணக்கீடு மாற்றம் & சம்பள விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் புதிய ஃபார்முலாவுடன் DA? கணக்கீடு மாற்றம் & சம்பள விவரம் இதோ!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி தொடர்பான கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ள நிலையில், ஜூலை மாதத்தில் புதிய ஃபார்முலாவுடன் டிஏ அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

DA உயர்வு

கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தப்பட்ட பிறகு இப்போது அகவிலைப்படி தொடர்பாக மற்றொரு புதிய அப்டேட் வந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜூலையில் DAவில் தனி உயர்வு இருக்கும். ஆனால், ஜூலையில் DA கணக்கீட்டை கணக்கிடுவதற்கான ஃபார்முலா மாறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் DA 3% அதிகரிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இப்போது வரை மொத்த DA 34% எட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில், தற்போது அடுத்த அகவிலைப்படியில் மாற்றம் செய்வது விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. ஒருபுறம், ஏஐசிபிஐ குறியீட்டில் நிலையான சரிவு உள்ளது. அதே நேரத்தில், இப்போது அகவிலைப்படி கணக்கீடும் மாற்றப்பட்ட முறையில் செய்யப்படும். அதாவது, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி தொடர்பான கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. தொழிலாளர் அமைச்சகம் அகவிலைப்படிக்கான அடிப்படை ஆண்டான 2016ஐ மாற்றியுள்ளது. மேலும் ஊதிய விகிதக் குறியீட்டின் புதிய தொடர் (WRI-Wage Rate Index) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்போது 2016=100 என்ற அடிப்படை ஆண்டுடன் கூடிய புதிய WRI வரிசையானது பழைய அடிப்படை ஆண்டு 1963-65க்கு பதிலாக மாற்றப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 7வது ஊதியக் குழுவின் தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்குவதன் மூலம் மொத்த DA அளவு கணக்கிடப்படுகிறது. உங்கள் அடிப்படை ஊதியம் ரூ. 56,900 டிஏ (56,900 x12)/100 எனில், தற்போதைய சதவீத விகிதம் 12% ஆகும். அகவிலைப்படியின் சதவீதம் = கடந்த 12 மாதங்களில் CPI இன் சராசரி – 115.76. இப்போது வரும் தொகை 115.76 ஆல் வகுக்கப்படும். வரும் மதிப்பெண் 100 ஆல் பெருக்கப்படும்.

இதனுடன், 7வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீட்டிற்கு, ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் DA கணக்கிடப்பட வேண்டும். ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 25,000 என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவருடைய டிஏ கணக்கீடு 25,000ல் 34% ஆக இருக்கும். மேலும், ரூ.25,000ல் 34% அதாவது மொத்த DA ரூ.8500 ஆக இருக்கும். இதேபோல், மீதமுள்ள சம்பள அமைப்பு உள்ளவர்களும் தங்கள் அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப கணக்கிடலாம். இந்தியாவில் உள்ள வருமான வரி விதிகளின் கீழ், அகவிலைப்படி பற்றிய தனித் தகவல் வருமான வரி ரிட்டனில் (ITR) கொடுக்கப்பட வேண்டும்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

அதாவது அகவிலைப்படி என்ற பெயரில் நீங்கள் பெறும் தொகைக்கு வரி விதிக்கப்படும் மற்றும் அதற்கு வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான அகவிலைப்படி (DA) உள்ளன. முதலாவது தொழில்துறை அகவிலைப்படி மற்றும் இரண்டாவது மாறக்கூடிய அகவிலைப்படி ஆகும். இதில் தொழில்துறை அகவிலைப்படி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் திருத்தப்படுகிறது. இது மத்திய அரசின் பொதுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கானது. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மாறுபடும் அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் திருத்தப்படும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலும் மாறுபடும் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!