மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – DA உயர்வு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - DA உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - DA உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – DA உயர்வு!

சத்தீஸ்கர் அரசு ஊழியர்கள் அனைவரும் நீண்ட நாட்களாகவே வாடகைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

DA உயர்வு:

சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்கள் மே 2022 முதல் 7வது ஊதியக் குழுவின் கீழ் 22% அகவிலைப்படியும், 6வது ஊதியக் குழுவின் கீழ் 174% அகவிலைப்படியும் பெற்று வந்தனர். இதற்குப் பிறகு வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் விவசாய கடன்களுக்கு 1.5% மானியம் – அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

இந்த போராட்டத்திற்கு பிறகு மீண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாநில அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு வழங்க போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில், 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு 6% முதல் 28% வரையிலும், 6வது ஊதியக் குழுவின் கீழ் உள்ளவர்களுக்கு 15% முதல் 189% வரையிலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு வரும் ஆகஸ்ட் 1, 2022 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் எனவும், சிறப்பு மற்றும் தனிப்பட்ட கொடுப்பனவுகளை உள்ளடக்காது எனவும் மாநில அரசின் நிதித் துறை அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் கிட்டத்தட்ட 3.8 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசுக்கு ரூ.2,160 கோடி கூடுதல் சுமை ஏற்படும் எனவும் மாநில அரசின் நிதித் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!