தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்வு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் - 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் - 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்வு!

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், தற்போது 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என பல நாட்களாக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி & ஜூன் மற்றும் ஜூலை & டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.

தமிழக பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறை ரத்து – ஷாக் அறிவிப்பு!

மேலும், வழக்கமாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுகிறது மற்றும் அதிகபட்சமாக 6 சதவீதம் வரைக்கும் கூட அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில்லரை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இந்த ஜூலை மாதத்தில் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமல்லாமல், அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அகவிலைப்படி சம்பள உயர்வையும் எதிர்பார்த்து தமிழக அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!