மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, HRA கணக்கீடு – 7வது ஊதியக்குழு விளக்கம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, HRA கணக்கீடு - 7வது ஊதியக்குழு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, HRA கணக்கீடு - 7வது ஊதியக்குழு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, HRA கணக்கீடு – 7வது ஊதியக்குழு விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 11% கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் HRA கொடுப்பனவுகளும் உயர்ந்துள்ளது. இந்த கணக்கீடு குறித்த முழு விளக்கங்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

HRA கணக்கீடு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை 28 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த திருத்தப்பட்ட தொகை ஜூன் மாத தவணையுடன் மீண்டுமாக கொடுக்கப்பட இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான DA தொகை அதிகரித்த பிறகு, மற்ற கொடுப்பனவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மதுபான விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

இந்த கூடுதல் சலுகையில் சிறந்ததாக கருதப்படும் வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA), 25 சதவிகிதம் அதிகமாக இருக்கும்போது HRA அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரித்த போது வீட்டு வாடகை கொடுப்பனவும் திருத்தப்பட்டது.

இதன் மூலம் அரசு ஊழியர்கள் பெறும் HRA நன்மைகளை பொறுத்தளவு:

மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) திருத்தம் என்பது உதவித்தொகை அடிப்படையில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் HRA அதிகரிப்பின் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, ஊழியர்கள் வசிக்கும் நகரத்தின் அடிப்படையில் 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற அடிப்படையில் HRA தொகை வழங்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை 1 முதல் பொருந்தும். இப்போது X பிரிவில் வரும் மத்திய அரசு ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.5400க்கு மேல் HRA உயர்வு பெறுவார்கள். இதற்குப் பிறகு, Y வகுப்பிற்கு மாதம் ரூ.3600 மற்றும் Z வகுப்புக்கு மாதம் ரூ.1800 வரை HRA உயர்வு கிடைக்கும்.

HRA கணக்கீடு:

7 வது ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.56000 ஆகும். இதில் 27 சதவிகித HRA விகிதத்தின் கணக்கீட்டின் படி,

HRA = ரூ.56000 x 27/100 = மாதம் ரூ.15120

முதல் HRA = ரூ.56000 x 24/100 = மாதம் ரூ.13440

இதுவரை HRA தொகை:

7 வது ஊதியக்குழு அமலுக்கு வந்தபோது, HRA 30, 20 மற்றும் 10 சதவீதத்தில் இருந்து 24, 18 மற்றும் 9 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் இது X, Y மற்றும் Z ஆகிய 3 பிரிவுகளை உருவாக்கியது. அந்த நேரத்தில் DA பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து DoPTன் அறிவிப்பில் DA தொகை 25 சதவிகிதத்தை தாண்டும்போது, HRA தொகையும் திருத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

HRA வில் X, Y மற்றும் Z வகை:

அதாவது 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 27% HRA கிடைக்கும். அதே நேரத்தில், Y வகை நகரங்களில் 18 சதவீதமாகவும், Z பிரிவில் 9 சதவீதமாகவும் HRA இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!