மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் மாத சம்பளத்துடன், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகையை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய தகவலின் படி, மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை தொடர்பான செய்தியை விரைவில் பெற இருப்பதாக அறிக்கைகள் தகவல் தெரிவித்து வருகின்றன. அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 1.5 ஆண்டுகள் அதாவது 18 மாத காலமாக நிறுத்தி வைத்திருந்த DA நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் வழங்க முடிவு செய்ய இருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. இது குறித்து வெளியான ஊடக அறிக்கைகளின் படி, ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை மத்திய அரசு ஊழியர்கள் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TN TRB 9494 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – வருடாந்திர கால அட்டவணை வெளியீடு!

ஆனால், இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையிட்டு வருகின்றனர். இது குறித்து JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், கவுன்சில் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும் அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அகவிலைப்படி நிலுவைத்தொகையை ஒருமுறை கொடுத்து தீர்க்க வேண்டும் என தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இப்போது மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் JCM நடத்தும் கூட்டுக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து விவாதிக்கப்படும் என்றும், 18 மாத நிலுவைத் தொகை குறித்து அரசிடம் இருந்து உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – விஐபி தரிசனம் ரத்து!

இப்போது DA உயர்வால் அரசுத் துறையில் உள்ள நிலை-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம், நிலை-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ.2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு), ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!