மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – 18 மாத DA நிலுவைத் தொகை எப்போது? தொடரும் வலியுறுத்தல்!

0
மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு - 18 மாத DA நிலுவைத் தொகை எப்போது? தொடரும் வலியுறுத்தல்!
மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு - 18 மாத DA நிலுவைத் தொகை எப்போது? தொடரும் வலியுறுத்தல்!
மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – 18 மாத DA நிலுவைத் தொகை எப்போது? தொடரும் வலியுறுத்தல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவை தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கும் படி ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

நிலுவைத்தொகை:

மத்திய அரசின் ஊழியர்களுக்கு அரசு செலுத்த வேண்டியுள்ள 2020 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரையிலான அகவிலைப்படி நிலுவை தொகை பாக்கி குறித்து அரசுக்கு கோரிக்கைகள் நீண்டு வருகின்றது. அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து, தற்போது அரசு பரிசீலிக்கவில்லை என ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளது வருத்தமடைய வைத்துள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான நிலுவைத் தொகையை செலுத்தும் முடிவை அரசு நிறுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், ஹோலி பண்டிகையையொட்டி, DA ஐ உயர்த்துவதன் மூலம் ஊழியர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலையில் ஒரு மணி நேரத்திற்கான ஊதியத்துடன் வேலை..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது, இதனால் அந்த பணத்தை ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்கு அரசு உதவியது. தொற்றுநோய்களின் போது அரசு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது. இதனுடன், மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் டிஏ குறைக்கப்படவில்லை. ஆண்டு முழுவதும் ஊழியர்களின் DA மற்றும் சம்பளமும் வழங்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி எல்லா இடங்களிலும் இலவச உணவு!

JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிக்கையின் படி, முதல் நிலை ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதேசமயம், 13ம் நிலை ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900, நிலை-14 ஊழியரின் டிஏ நிலுவைத் தொகை ரூ. 1,44,200 முதல் ரூ 2,18,200 வரை செலுத்தப்படும். 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய ஊழியர்கள் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 DA நிலுவைத் தொகையைப் பெறுவார்கள். அதே நேரத்தில், ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட DA நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது ரூ. 4,320 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!