மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு – ரூ.32,400 வரை ஊதியம் உயர்வு!!

16
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு - ரூ.32,400 வரை ஊதியம் உயர்வு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு - ரூ.32,400 வரை ஊதியம் உயர்வு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு – ரூ.32,400 வரை ஊதியம் உயர்வு!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் DA உயர்வு குறித்து தற்போது ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர்களது ஊதியம் ரூ.32,400 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி:

நாட்டில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை கண்டு வருகிறது. இதை அடுத்து நாட்டில் பொருளாதார சரிவை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஜனவரி 2020 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவித்தது. நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வந்ததால் ஜனவரி 2020, ஜூலை 2020, ஜனவரி 2021 வரை அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜூன் 26 வரை 12 நகராட்சிகளில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

இதனை தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகையுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வருகிற ஜூன் 26ம் தேதி அன்று நிதி அமைச்சக அதிகாரிகள் உள்ளிட உயர்மட்ட குழுக்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அகவிலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களின் ஊதியம் 28% (17+(4+3+4))அதிகரிக்கும்.

TN Job “FB  Group” Join Now

7வது ஊதியக்குழு கூற்றின்படி அரசு ஊழியரின் மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக இருக்கும் நிலையில் அத்துடன் DA சேர்த்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.2700 அதிகரிக்கும். இதனால் அரசு ஊழியர்களின் வருடாந்திர ஊதியம் ரூ.32,400 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு வருகிற 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு பின்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

16 COMMENTS

  1. EPS 95 pension getting persons are getting low pension, no work, if work that from home, getting high salary. What a pity? Good government.

  2. இந்த செய்தியை மத்திய அரசு அறிவித்த பிறகு பதிவிடவும். எத்தனை முறை தான் ஒரே பல்லவியை கேட்பது.

  3. நானும் இதைக் கடந்த 3,4 மாதங்களாகக் கவனிச்து வருகிறேன். அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை – ஜனவாி மற்றும் ஜூலை மாதம் – அரசாங்கம் குழு அமைத்து விலைவாசி ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து அக்குளுவின் அறிவுறுத்தல்படி குறிப்பிட்ட விழுக்காடு தந்து விலைவாசி உயா்வைச் சமாளிக்கச் சிறு தொகை அனைத்து மட்ட அலுவலா்களுக்கும் தகுதிக்குத் தகுந்தவாறு நிா்ணயிக்கப்படும், இது நிலை மற்றும் விகிதாரத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ரூ. 500 முதல் 7000 வரை வரும். ஆனால், பொது மக்கள் மத்தியில் இது வரை எவ்வளவு வழங்கப்பட்டு வந்ததோ அதையே பறைசாற்றி ஏதோ மத்திய அரசு ஊழியர்களுக்கு லக்ஷக்கணக்கில் பணம் தரப்படுவது போல் செய்திகள் பாமர மக்களுக்கிடையே பரப்பப் படுகிறது. தேவையில்லாமல் பாமர மக்களைக் குழப்பாமல் உள்ளதை வெளியிடுங்கள். வீணே குழப்ப வேண்டாம்.

  4. அ.வி.படி பற்றி மீண்டும் மீண்டும் தயவு செய்து ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடாதீர்கள். இதனால் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்.

  5. How can you say that there is DA hike when the central Govt is yet to decide on the issue in the cabinet meeting..Please do not spread rumours…Are you a fly by night cheap newspaper?

  6. உண்மை இன்னும் அரசு ஆணை ஏதும் வரவில்லை நிறுத்தி வைத்த அகவிலைப்படி மட்டுமே வரும் இதனை எல்லா யு டியூப் தயாரிக்கும் நிறுவனங்கள் தினம் தினம் போட்டு அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

  7. Don’t post this news again until release official order in this matter. Government should be decide to offer a uniform DA hike to all employees and pensioners because price hikes are something everyone has in common.

  8. இந்த செய்தி தவற்றின் அடிப்படையில் உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 18000/=. அப்படி என்றால் 11% DA உயர்வுக்கு 1980/= தான் மாதந்தோறும் உயரும். பின் எப்படி ரூபாய் 2700/= உயரும். இவ்வாறு தவறான செய்தி/ பதிவு போடுபவர்களை குறைந்த பட்சம் இரண்டு வருடம் சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் உணவுப்பொருட்களின் விலைவாசி கண்மூடித்தனமாக உயர்ந்து உள்ளது. அதற்கு
    முக்கிய காரணம் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வு. போக்குவரத்து கட்டுப்பாடு. இந்த கொரோனா காலத்தில் பெட்ரோல் விலை சர்வதேச அளவில் குறைந்த பின்பும் , விலை குறைவை மக்களுக்கு அளிக்காது கொள்ளைக்காரன் / கந்துவட்டி காரன் போல , குறைந்த விலையை , வரி என்ற பெயரில் உயர்த்தி விட்டது மாபெரும் கொடுமை. இதற்கு மத்தியில் சேமிப்புக்கு கொடுத்து வந்த வட்டியை குறைத்ததால் ஓய்வு பெற்றவர்கள் தங்களது வாழ்க்கை யை நடத்தவே கஷ்டப்படுகின்றனர். பிரெஞ்சு நாட்டில் 14 ஆம் லூயி மனைவி ரொட்டி கேட்ட மக்களிடம் கேக் சாப்பிடுங்கள் என்று கூறியது போல , மத்திய , மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை , மத்திய அரசு / மோடி அரசு முடக்கிய செயலாகும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியம் உயரவில்லை. எங்களுக்கு தர வேண்டியதை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது. அதைத்தான் திரும்ப தர போகிறது மத்திய அரசு. ஊடகங்கள் மற்றும் இதை பதிவு செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  9. சும்மா போட்ட நியூஸையே பத்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றிப் போட்டு மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் ExamsDaily செய்தி.

  10. சும்மா போட்ட நியூஸையே பத்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றிப் போட்டு மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் மற்றும் பொதுமக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் ExamsDaily செய்தி.

  11. The central government done worst thing enhance DA during corona and economic problems, good for nothing people will get sizable hike means worst decision by Finance Minister and co

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!