மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA), HRA உயர்வு – வர இருக்கும் 5 முக்கிய அறிவிப்புகள்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA), HRA உயர்வு - வர இருக்கும் 5 முக்கிய அறிவிப்புகள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA), HRA உயர்வு - வர இருக்கும் 5 முக்கிய அறிவிப்புகள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA), HRA உயர்வு – வர இருக்கும் 5 முக்கிய அறிவிப்புகள்!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR), அத்துடன் DA/DR மற்றும் வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) அதிகரிப்பு ஆகியவை குறித்து விரைவில் அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

மத்திய அரசின் ஒப்புதல்:

ஹிமாச்சல பிரதேச அரசு ஜனவரி 31 அன்று அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், மாநில அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அரசின் புதிய அறிவிப்பின் மூலம் 2,25,000 ஊழியர்கல் பயனடைய உள்ளதாகவும், இதனால் மாநில கருவூலத்தில் 6,000 கோடி ரூபாய் பணச்சுமை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR), அத்துடன் DA/DR மற்றும் வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) அதிகரிப்பு ஆகியவை குறித்து விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் – சென்னையிலிருந்து 52 பஸ்கள் இயக்கம்!

அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அதிகம் அறிவிக்கவில்லை என்றாலும், அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகள் வரவிருக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக 2022 க்கான பட்ஜெட் செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை அறிவித்துள்ளன. ஒவ்வொரு அரசு ஊழியரும் அறிந்திருக்க வேண்டிய ஐந்து முக்கிய அறிவிப்புகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொருத்துதல் காரணி:

மத்திய மற்றும் மாநில ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை இந்திய அரசு விரைவில் உயர்த்த உள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, பொருத்துதல் காரணி அதிகரிப்பு மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும். பல ஊழியர் சங்கங்கள் இதனை 2.57ல் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

நிலுவைத் தொகை:

ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிக்கையின் படி, நிலுவையில் உள்ள டிஏ பாக்கிகள் குறித்து மத்திய அமைச்சரவை விவாதம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் நிலுவைத் தொகையை வழங்க முடிவு செய்தால், ஊழியர்கள் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை டிஏ நிலுவைத் தொகையைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அடிப்படை ஊதிய உயர்வு:

ஃபிட்மென்ட் காரணியை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். இந்நிலையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.

டிஏ 34% உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் 3% அதிகரித்து 34% வரை உயர்த்த இருப்பதாகவும், குறிப்பிடத்தக்க வகையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!