மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி 3% உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அகவிலைப்படி 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அகவிலைப்படி 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி 3% உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022ம் ஆண்டு ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அகவிலைப்படி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஓரளவு நிலைமை சரியான பின்பு மீண்டும் அகவிலைப்படி வழங்க அரசு திட்டமிட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. கடந்த 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்க வலியுறுத்தி வந்த நிலையில் ஒரே தவணையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2022 புத்தாண்டு வந்தது முதல் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து வந்த நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடும் என்ற தகவல் வந்துள்ளது.

தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்!

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு கிடைக்கப்பெறும். இதன் மூலம் மொத்தம் 34% ஆக அகவிலைப்படி உயரும் இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் அதன் தொடர்ச்சியாக வீட்டு வாடகை படி படியும் ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!