தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வரின் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வரின் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அத்துடன் ஜனவரி மாதத்திலும் மீண்டும் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது. அதனால் தமிழக அரசு ஊழியர்களும் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

உச்சம் தொடும் கொரோனா, மீண்டும் ஊரடங்கு? பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் 14-வது அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் கூறியதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியது மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இவ்வாறு தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதை சுட்டி காட்டியுள்ளார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதியுடையோர், தகுதியில்லாதோர் யார்?

அத்துடன் நிதி நெருக்கடி நிலை ஏற்படும் போதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கட்டாயமாக அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன்படி வருகிற 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு அகவிலைப்படி உயர்வு ஏற்படுவதால் தமிழக அரசு ஊழியர்கள் புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here