தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, ஓய்வு பெறும் வயது – முதல்வருக்கு கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, ஓய்வு பெறும் வயது - முதல்வருக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, ஓய்வு பெறும் வயது - முதல்வருக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, ஓய்வு பெறும் வயது – முதல்வருக்கு கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டிக்கவும், அகவிலைப்படி உயர்வை வழங்கவும் வேண்டி முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அரசு ஆசிரியர்கள் ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் கோரிக்கை:

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கோரிக்கை கடிதத்தில் தங்களின் பல கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக முதல்வரின் செயல்களை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். நாட்டிலேயே முதன்மை முதல்வராக இருப்பதற்கு பெருமை கொள்வதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் 2 நாட்கள் மூடல் – மாவட்ட நிர்வாகம் தகவல்!

தொடர்ந்து, மத்திய அரசு தனது பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியுள்ளது. இதனை பின்பற்றி கடந்த ஆட்சியில் தமிழகத்திலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் சங்கம் மற்றும் அரசு பணியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையின் பேரில் தமிழகத்தில் அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனையே தற்போதும் கடைபிடிக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

TN Job “FB  Group” Join Now

இதேபோல், மத்திய அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தனது பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய படிகளை 3 தவணைகளாக நிலுவையில் வைத்திருந்தது. தற்போது, நிலுவையில் அகவிலைப்படி உயர்வானது 11% உயர்த்தப்பட்டு 28% ஆக ஜூலை 1, 2021 முதல் வழங்க உத்தரவிடபட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை வழங்க தீர்மானித்துள்ள நிலையில், தமிழக அரசும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here