அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – எவ்வளவு தெரியுமா? முழு பட்டியல் இதோ!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு தெரியுமா? முழு பட்டியல் இதோ!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு தெரியுமா? முழு பட்டியல் இதோ!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – எவ்வளவு தெரியுமா? முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளனர். இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

அகவிலைப்படி உயர்வு:

இந்தியாவில் 2023ம் ஆண்டு தொடங்கியவுடன் முதல் கட்டமாக மத்திய அரசு விலைவாசியை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படியை 4% உயர்த்தி அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31% ல் இருந்து 35% ஆக உயர்த்தியுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி 2023 ஜனவரி 1ம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல உத்தரபிரதேசத்தில் அகவிலைப்படி மத்திய அரசை போலவே 4% உயர்த்தப்பட்டது. மேலும் ஹரியானாவில் நடப்பு ஆண்டு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 42% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2023 ஏப்ரல் மாதம் 1ம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் அகவிலைப்படி 34 % ஆக உயர்த்தப்பட்டு 2023 ஜனவரி 1ம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!