மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – DA உயர்வு உள்ளிட்ட 5 மாற்றங்கள்!

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - DA உயர்வு உள்ளிட்ட 5 மாற்றங்கள்!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - DA உயர்வு உள்ளிட்ட 5 மாற்றங்கள்!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – DA உயர்வு உள்ளிட்ட 5 மாற்றங்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி, ஓய்வூதிய படி போன்றவை குறித்த மாற்றங்களை இந்த பதிவில் காண்போம்.

நிலுவை தவணை:

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR ஆகியவற்றை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இந்த றிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

இந்தியாவில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி – மத்திய அரசு தகவல்!

மத்திய அரசு அகவிலைப்படியை அதிகரிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA தொகை 28% ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அவற்றை பற்றியும் காண்போம்.

மத்திய அரசு அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஜூலை, 2019 முதல் மத்திய அரசு ஊழியர்கள் 17 சதவீத டி.ஏ. பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்த்தப்பட்ட DA தொகை 2021 ஜூலை முதல் நடைமுறைக்கு வரும், இதனால், மாதத்திற்கு ரூ .18,000 பெறும் மத்திய அரசு ஊழியர், தனது சம்பளத்தில் 11 சதவீதம் அதிகமா பெறுவார், அதவாது இவரது சம்பளத்தில் ஜூலை முதல் ரூ .5,040 உயரும்.

TN Job “FB  Group” Join Now

அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், டி.ஏ. உயர்வு மாதாந்திர வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கிராவிட்டி தொகையை உயர்த்தும். எனவே, பி.எஃப்., பயண கொடுப்பனவு மற்றும் கிராச்சுட்டி ஆகியவை ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அதிகரிக்கும்.

மேலும், மத்திய வங்கிகளிடம் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக பயன்பாடான எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் கணக்கு வரவு வைக்கப்பட்ட ஓய்வூதிய சீட்டுகளை அனுப்ப அனுமதி அளித்துள்ளது. இதனால் ஓய்வூதியம் பெறுவோரின் சிரமங்கள் குறைக்கப்படும்.

மத்திய அரசு சமீபத்தில், மே 31ம் தேதிக்கு பின்னர் பயண சலுகை படியினை பெறுவதற்கான பில்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. வழக்கமாக பயணப்படி கோரிக்கைக்கு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மே 31 வரை காலக்கெடுவை மத்திய அரசு நீடித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!