மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான fitment factor உயர்த்தும் கோரிக்கையைத் தற்போது ஆய்வு செய்து வருகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28 % ஆக அதிகரிக்கப்பட்டது. பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயா்வால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பயன் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாளை (பிப்.14) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் தேதியிட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 3% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல் வந்துள்ளது. மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் 34 சதவீதம் பெறுவார்கள் இதன் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறுபவர்களுக்கு ஊதியம் ரூபாய் 6,120 கூடுதலாக கிடைக்கும்.. அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறுபவருக்கு ரூ.19,346 கூடுதல் தொகையாக கிடைக்கும். அகவிலைப்படியை தொடர்ந்து ஊதிய உயர்வு வேண்டியும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

தமிழகத்தில் பிப்.15 முதல் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

இதனையடுத்து மத்திய அரசு fitment factor உயர்த்தும் கோரிக்கையைத் தற்போது ஆய்வு செய்து வருகிறது. இதனால் சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது போது உள்ள fitment factor அளவீட்டை 2.57ல் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அகவிலைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here