மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரை வரவு? DA நிலுவைத்தொகை வெளியீடு!

0
மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரை வரவு? DA நிலுவைத்தொகை வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரை வரவு? DA நிலுவைத்தொகை வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரை வரவு? DA நிலுவைத்தொகை வெளியீடு!

கடந்த 20 மாதங்களாக அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

DA நிலுவைத்தொகை

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 20 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகை எப்போது கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் இப்போது கிடைக்கும், அப்போது கிடைக்கும் என்று DA தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இதுவரையும் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இந்நிலையில் அரசாங்கம், புத்தாண்டில் DA நிலுவைத்தொகையை ஊழியர்களின் கணக்கில் மாற்றலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.14 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு!

அந்த வகையில் மத்திய அரசு விரைவில் வெளியிடும் அகவிலைப்படி (DA) தொகையின் மூலம் அரசு ஊழியர்கள் ரூ.2 லட்சம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இப்போது ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் DA தொகை 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, ஊழியர்களுக்கு பல சலுகைகளும் கிடைக்கும். தொடர்ந்து தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் (JCM) செயலாளர் சிவ கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, அகவிலைப்படி (DA) பணத்தை அரசாங்கம் ஒரு முறையில் செட்டில் செய்யலாம் என்று தெரிகிறது.

இப்போது அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் DA தொகை மொத்தமும் கிடைத்தால் அவர்களின் கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்படும். செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, நிலை 1 ஊழியர்களுக்கு DA நிலுவைத்தொகை ரூ.11880 முதல் ரூ.37554 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!

அது போல நிலை 13 ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 1,23,100 முதல் ரூ 2,15,900 வரை கிடைக்கும். இது தவிர, லெவல்-14ன் படி கணக்கிட்டால், ஒரு ஊழியருக்கு கிடைக்கும் DA நிலுவைத்தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுளளது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகையை வழங்குவதற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் இந்த பணம் கோடிக்கணக்கான ஊழியர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here