மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA & HRA உயர்வு? சம்பளம் உயர்வு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA & HRA உயர்வு? சம்பளம் உயர்வு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA & HRA உயர்வு? சம்பளம் உயர்வு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA & HRA உயர்வு? சம்பளம் உயர்வு விவரம் இதோ!

வரவிருக்கும் புதிய ஆண்டிற்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடுகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு:

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களின் DA தொகையை 3% உயர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மீண்டுமாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ பாரினாவின் கவலையான இன்ஸ்டா பதிவு – ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்!!

இப்போது 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு தனது ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் அகவிலைப்படியை (DA) உயர்த்தி, வருகின்ற புத்தாண்டை ஒட்டி அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்த ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் 2022 ஜனவரியில் HRA அதிகரிப்புடன் மற்றொரு DA உயர்வையும் எதிர்பார்க்கலாம். இருப்பினும், HRA உயர்வு ரயில்வே வாரியத்தின் 11.56 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுப்படுத்தப்படலாம்.

சமையல் போட்டியில் தோற்று போன சரவணன், சந்தியாவை திட்டும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இந்த திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், ரயில்வே வாரிய அரசு ஊழியர்கள் 2021 ஜனவரியில் உயர்த்தப்பட்ட HRA தொகையை பெறலாம் என தெரிகிறது. இப்போது வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசுப் பணியாளர்களின் இந்த HRA தொகை அவர்கள் பணியமர்த்தப்பட்ட நகரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த நகரங்கள் X வகை, Y வகை மற்றும் Z வகை என மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

BHEL ராணிப்பேட்டையில் மதிப்பெண் அடிப்படையில் பணிகள் – 182 காலிப்பணியிடங்கள்..!

அந்த வகையில் 50 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவின் கீழ் வருகின்றன. மேலும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் Y பிரிவிலும், 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை நகரம் Z பிரிவிலும் வரும். இந்த மூன்று வகைகளுக்கும் குறைந்தபட்ச HRA ரூ. 5400, 3600 மற்றும் ரூ.1800 என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது செலவினத் துறையின் படி, அகவிலைப்படி (DA) தொகை 50 சதவீதத்தை எட்டினால், ஊழியர்களின் அதிகபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!