மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் – DA & HRA உயர்வு கணக்கீடு விபரம்!

1
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் - DA & HRA உயர்வு கணக்கீடு விபரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் - DA & HRA உயர்வு கணக்கீடு விபரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் – DA & HRA உயர்வு கணக்கீடு விபரம்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 28% மாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாத ஊதியத்துடன் 27% HRA தொகையை பெற உள்ளனர்.

HRA அதிகரிப்பு

பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள், இப்போது அடிப்படை ஊதியத்துடன் 28 சதவீத அகவிலைப்படி (DA) உதவித்தொகையை பெற உள்ளனர். கூடுதலாக, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) கணிசமான உயர்வை கண்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம் இப்போது இரட்டை போனஸுடன் வரும். விதிகளின்படி, அரசு ஊழியர்களுக்கு DA தொகை 25 சதவிகிதத்தை தாண்டியதால் HRA தொகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர்!

எனவே, மத்திய அரசும் HRA தொகையை 27 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் DA தொகை 25% தாண்டும் பட்சத்தில் HRA தொகையும் திருத்தப்படும் என ஜூலை 7, 2017 அன்று மத்திய செலவுத் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. இப்போது ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனவே HRA தொகையையும் திருத்தப்படவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு உத்தரவின் படி, HRA தொகை X, Y மற்றும் Z என்ற நகரங்களின் அடிப்படையின் கீழ் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் X வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 27 சதவீதமாக இருக்கும். இதேபோல், Y வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 18 சதவீதம் ஆகும். மேலும் Z வகை நகரங்களுக்கு அடிப்படை ஊதியத்தில் HRA தொகை 9 சதவீதமாக இருக்கும். இப்போது 7வது சம்பள கமிஷன் பே மேட்ரிக்ஸ் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 ஆகும்.

UPSC சிவில் சர்வீஸ் தேர்வெழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.3060 DA தொகையை ஜூன் 2021 வரை 17 சதவீத விகிதத்தில் பெறுகின்றனர். தொடர்ந்து ஜூலை 2021 முதல், மத்திய அரசு ஊழியர்கள் 28% DA அதிகரிப்பு மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.5040 பெற துவங்கியுள்ளனர். இந்த கணக்கீட்டின் படி, ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் ரூ.1980 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் முடிவு செய்யப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!