அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 34 சதவீதமாக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 34 சதவீதமாக உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 34 சதவீதமாக உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 34 சதவீதமாக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகையை உயர்த்தினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் என பலரும் பலன் அடைவார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது டி ஏ தொகை உயர்த்தப் பட்டு உள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு டி ஏ அரியர் தொகை போன்றவை மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

MNRE மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.2,16,600/- வரை ஊதியம்..!

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கையை வைத்து நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. புதிய அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்க ஆரம்பித்து உள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மாநிலத்தில் உள்ள ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக அறிவித்து உள்ளனர். அதனை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இந்நிலையில் முதல்வர் கூறியதாவது, 2022 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டிலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அப்போதும் 3 சதவீத உயர்வு இருந்தது. இந்த முறையும் 3 சதவீத உயர்வை ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வுக்கு மத்திய அமைச்சரவை நேற்றைய முன்தினம் ஒப்புதல் வழங்கியது. தற்போது புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!