மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D இமான் – என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!

0
மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D இமான் - என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!
மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D இமான் - என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!
மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D இமான் – என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கும் D.இமான் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ள விஷயத்தை பற்றி அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

விவாகரத்து செய்தி:

தமிழ் திரை உலகில் தற்போது உள்ள இசை அமைப்பாளர்களின் வரிசையில் முன்னணியில் உள்ளவர் D.இமான். இவர் முதன் முதலில் நடிகர் விஜய்யின் தமிழன் திரைப்படத்திற்கு இசை அமைத்தார். தொடர்ந்து பல தென்னிந்திய மொழிகளிலும் உள்ள படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரின் இசைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் இசையில் வந்த பல பாடல்கள் மெகா ஹிட் ரகங்களாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த விசுவாசம் படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ & ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் மகா சங்கமம் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த வருடத்தில் மட்டும் D.இமான் அவர்கள் டெடி, பூமி, லாபம், உடன்பிறப்பு, அண்ணாத்த போன்ற பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் வெளியாக இருக்கும் பல படங்களுக்கும் அவர் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை D.இமான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் தனக்கும் தனது மனைவி மோனிகா ரிச்சர்டுக்கும் பரஸ்பர விவாகரத்து நடந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது.

‘விஜய் டிவி’ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் & அமீர்? ரசிகர்கள் ஷாக்!

தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் தாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இத்தனை வருடங்களாக என்னையும் எனது இசையையும் ஆதரித்து வந்த அனைவர்க்கும் நன்றி. நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கிறோம். எங்கள் நலன் விரும்பிகளிடமும், ரசிகர்களிடமும் எங்கள் தனிப்பட்ட வாழ்வை வாழ விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று அதில் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!