இந்தியாவில் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்? ராகுல் காந்தி உறுதி!

0
இந்தியாவில் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்? ராகுல் காந்தி உறுதி!
இந்தியாவில் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்? ராகுல் காந்தி உறுதி!
இந்தியாவில் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்? ராகுல் காந்தி உறுதி!

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முக்கிய தேர்தல் அறிக்கைகளை மக்களுக்கு செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

சட்டசபை தேர்தல்:

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதை அடுத்து நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மக்களின் பெரும்பான்மையை பெறுவதற்காக பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி, அவர்கள் அறிவித்திருந்த நலத் திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றன. மேலும் மக்களின் கோரிக்கைகளையும் ஏற்று அதற்கேற்றவாறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போதைய அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான கட் ஆப் எவ்வளவு? முழு விவரம் இதோ!

மேலும் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதிகளில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தேவையான பல திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான பயனுள்ள புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதே போல் குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அடுத்து காங்கிரஸ் எம்.பி யான ராகுல்காந்தி அகமதாபாத் சென்றிருந்த நிலையில் அங்கு நடைபெற்ற பேரணியில் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

அதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் காஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!