சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு – வியாபாரிகள் மகிழ்ச்சி!

0
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு - வியாபாரிகள் மகிழ்ச்சி!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு - வியாபாரிகள் மகிழ்ச்சி!சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு - வியாபாரிகள் மகிழ்ச்சி!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு – வியாபாரிகள் மகிழ்ச்சி!

மக்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 187 குறைந்துள்ளது.

சமையல் சிலிண்டர்:

மக்களிடம் அன்றாட தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருக்கிறது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க அதன் விலையும் அதிகரித்து வருகிறது. சிலிண்டர் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ. 965.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அதே போல சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 2,373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன் படி ஏற்கனவே விற்பனையான ரூ. 2,373ல் இருந்து ரூ. 187 குறைந்து தற்போது 2,186 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளதால் ஹோட்டல், டீ கடை போன்ற கடை நடத்தி வரும் வணிக வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதே போல வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் டெலிவரி செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கட்டணமும் அதிகரித்து இருப்பதாக புகார் வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!