தமிழக ரேஷன் கடைகளில் சிலிண்டர் விநியோகம்? முக்கிய தகவல்!

0
தமிழக ரேஷன் கடைகளில் சிலிண்டர் விநியோகம்? முக்கிய தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் சிலிண்டர் விநியோகம்? முக்கிய தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் சிலிண்டர் விநியோகம்? முக்கிய தகவல்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பல்வேறு வகையான நன்மைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக இத்திட்டம் முக்கிய நகரங்களில் செயல்பட உள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலிண்டர் விற்பனை:

இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே நேரம் இதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எப்போதும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மத்திய அரசு சார்பாக மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையும் தற்போது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் 200 முதல் 300 ருபாய் வரை சிலிண்டருக்கு மத்திய அரசு மானியத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மானியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் வழங்கப்படுகிறது. அத்துடன் வீட்டு பயன்பாட்டிற்கு 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டர் இணைப்பு பெற ஆதார் எண், முகவரி சான்று போன்ற ஆவணங்கள் அவசியமாகும். குறிப்பாக முகவரி கட்டாயம் இவை இல்லை என்றால் சிலிண்டர் இணைப்பு பெற முடியாது. இந்த சூழலில் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள், கல்லூரிகளில் படிப்போர் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

தமிழகத்தில் நாளை (ஜூலை 19) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

அதனால் முக்கிய இடங்களில் உள்ள ஏஜன்சிகள் மூலம் 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டை மட்டும் வழங்கினால் போதும் முகவரி சான்று கேட்க படமாட்டாது. இந்த நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை இந்தியன் ஆயிலுடன் இணைந்து ரேஷன் கடைகளில் சிலிண்டரை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!