விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் சுனிதாவை தாறுமாறாக கலாய்த்த புகழ் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் சுனிதாவை தாறுமாறாக கலாய்த்த புகழ் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் சுனிதாவை தாறுமாறாக கலாய்த்த புகழ் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் சுனிதாவை தாறுமாறாக கலாய்த்த புகழ் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் இந்த வார எபிசோடில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற பேரிங் பகுதியில் புகழ், ரோஷினியை மிரட்டுவதும், சுனிதாவை கலாய்ப்பதுமாக வெளியான வீடியோ ஒன்று மீண்டும் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுமார் 8 மாதங்கள் கழித்து மீண்டுமாக துவங்கி இருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 ஆரம்பம் முதலே மக்களிடம் இருந்து எக்கச்சக்கமான வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் லான்ச் எபிசோடு 2 வாரங்களாக சுமார் 4 எபிசோடுகள் என வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கான முதல் சமையல் சுற்று போன வாரத்துடன் துவங்கி இருக்கிறது. வழக்கம் போல இந்த எபிசோடில் கோமாளிகள் அனைவரும் திரைப்படங்களில் வரும் பிரபலமான கதாப்பாத்திரங்களாக மாறி மக்களை மகிழ்வித்திருந்தனர்.

மருத்துவமனையில் கால் வலியால் துடிக்கும் “பிக்பாஸ் அமீர்” – வைரல் வீடியோ! ரசிகர்கள் வேண்டுதல்!

அந்த வகையில் இந்த எபிசோடில் நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் வரும் எஸ்ஜே சூர்யா கெட்டப்பில் வரும் புகழ், மற்ற கோமாளியான சுனிதாவை தாறுமாறாக கலாய்க்கும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ கிளிப்பில் குக் ரோஷினி, கோமாளியை தேர்வு செய்ய வரும் போது அவரை குறுக்கிடும் புகழ் பார்த்து செலெக்ட் பண்ணு ரோஷினி. பார்த்து பத்திரமா யோசிச்சு எடு என்று சொல்ல ரோஷினி அவரை திரும்பி பார்க்கிறார்.

பிறகு பார்த்து எடுங்க ரோஷினி. கோமாளி வந்ததும் என்னை எதுவும் சொல்லக்கூடாது என்று புகழ் சொல்ல நீ என்ன வாய்ஸ் பேசுற. ஒழுங்கா எஸ்ஜே சூர்யா போல பேசு என்று ரக்ஷன் அவரை கலாய்க்கிறார். மறுபக்கத்தில் ரோஷினி கிடைக்க வேண்டும் என்று இருட்டு அறைக்குள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் குரேஷி. பிறகு ரோஷினி கோமாளியை செலெக்ட் செய்ததும், நீலாம்பரியாக புடவையை மடித்து கொண்டு வெளியே வருகிறார் சுனிதா. அப்போது, நீ யார் என்று எல்லாரும் சுனிதாவை பார்த்து கேட்க, வழக்கம் போல குழம்பிய அவர் நீலாம்பரி என்று சொல்வதற்கு பதிலாக நீலாங்கரை என்று சொல்லி விடுகிறார்.

தீ விபத்தில் தப்பிய சீரியல் நடிகர் ஸ்ரீ உருக்கம் – ‘உண்மையான தேவதைகள்’ தீயணைப்பு வீரர்கள் தான்!

உடனே நான் பாலவாக்கம் மேடம் என்று சொல்லிய புகழ் சுனிதாவை கேமரா முன்னாள் கூட்டி சென்று நான் அவர்களை டிராப் செய்து விடுகிறேன் என்று கலாய்க்க மொத்த செட்டும் சிரிப்பால் கலகலப்பாகிறது. தொடர்ந்து பரத் மற்றும் குரேஷி இருவரும் தங்களை யார் எடுப்பார்களோ என்று எதிர்பார்த்து கொண்டிருக்க, வெளியே அந்தோணி தாஸ் மற்றும் கிரேஸ் கருணாஸ் இருவரும் பரத்தை நினைத்து புலம்புகின்றவாறு வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!