‘குக் வித் கோமாளி’ புகழ் ஓபன் டாக் – ரூ.25 லட்சம் எல்லாம் வாங்கவில்லை!

0
'குக் வித் கோமாளி' புகழ் ஓபன் டாக் - ரூ.25 லட்சம் எல்லாம் வாங்கவில்லை!
'குக் வித் கோமாளி' புகழ் ஓபன் டாக் - ரூ.25 லட்சம் எல்லாம் வாங்கவில்லை!
‘குக் வித் கோமாளி’ புகழ் ஓபன் டாக் – ரூ.25 லட்சம் எல்லாம் வாங்கவில்லை!

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக தனி ரசிகர் கூட்டத்தை பெற்றவர் நடிகர் புகழ். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘எங்க சிரி பார்ப்போம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் 25 லட்சம் வென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவ்வளவு பணம் ஒன்றும் வரவில்லை என புகழ் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் புகழ்:

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் புகழ். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது. சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘எங்க சிரி பார்ப்போம்’ என்ற நிகழ்ச்சி வெளியானது. இதில் கலந்துகொண்டு 6 மணி நேரத்தில் 25 லட்ச ரூபாயை வென்றதாக தகவல் வெளியானது. அது குறித்த செய்திகள் வெளியான நிலையில் அவ்வளவு பணம் ஒன்றும் வரவில்லை என புகழ் விளக்கமளித்துள்ளார்.

ஷாருக்கானுடன் இணையும் விஜய் – ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு! சாத்தியமா?

இது குறித்து அவர் கூறுகையில், ‘எங்க சிரி பார்ப்போம்’ நிகழ்ச்சியில் ஜெயித்தேன். அந்த பரிசுத் தொகையை இருவருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தில் எனக்கு ரூ.12.5 லட்சம் வந்தது. அதில் டி.டி.எஸ் பிடித்ததுப் போக மீதி ரூ.7 லட்சம்தான் வந்தது. அனைத்து செய்திகளிலும் ரூ.25 லட்சம் ஜெயித்தேன் என்று போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் கைக்கு வந்தது ரூ.7 லட்சம் மட்டுமே. அதையுமே ஊரில் வீடு கட்ட கொடுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வரும் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் – வெளியான புகைப்படம்!!

இந்த போட்டியில் விஜே விக்னேஷ் காந்த் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஆர்த்தி, பிரேம்ஜி, அபிசேக் குமார், சதீஷ், மாயா, புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடைசிவரை நகைச்சுவை செய்பவர்கள் சிரிக்கக் கூடாது. அதே போல புகழ் கடைசி வரை சிரிப்பை அடக்கி போராடி வென்றார். அவர் மட்டுமில்லாமல் அபிஷேக் என்பவரும் கடைசி வரை சிரிக்காமல் இருந்து வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியை நடிகர் விவேக் மற்றும் சிவா தொகுத்து வழங்கினார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!