விஜய் டிவி ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் ஒரு நாள் சம்பளம் – CWC பிரபலம் பேட்டி!
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தன்னை கலந்து கொள்ள கூப்பிட்டதாகவும், ஆனால் தனக்கு தனது சுயமரியாதை தான் முக்கியம் என்பதனால் கலந்து கொள்ளவில்லை என்று குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
கடந்த சில ஆண்டுகளாக “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொள்வர். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு டாஸ்க் வழங்கப்படும். அதனை சரிவர செய்து விளையாடுபவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர்கள் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்த முறை 5வது சீஸன் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
அஜித்தின் வலிமை vs ரஜினியின் அண்ணாத்த – தீபாவளி ரிலீஸ்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமோக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை தீபாவிடம் பங்கேற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பினர் கலந்தாலோசித்தனராம்.
வீரம் அஜித்தின் தம்பிக்கு இரண்டாவது திருமணம்? வைரலாகும் புகைப்படம்!
இது குறித்து அவர் கூறுகையில், ‘என்னிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சொல்லி கூப்பிட்டார்கள். அங்கு சென்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றும் கூறினார்கள். நல்ல சம்பளம் தான். ஆனால், எனக்கு பணத்தினை விட சுயமரியாதை தான் முக்கியம். நான் காசு பணத்திற்கு அடிமை கிடையாது. அன்பு ஒன்றிற்கு தான் அடிமை’ இவ்வாறாக கூறி உள்ளார்.