மூன்றாம் முறையாக திருமணம் செய்யவுள்ள Cook With Comali புகழ்? வைரலாகும் பதிவு!

0
மூன்றாம் முறையாக திருமணம் செய்யவுள்ள Cook With Comali புகழ்? வைரலாகும் பதிவு!
மூன்றாம் முறையாக திருமணம் செய்யவுள்ள Cook With Comali புகழ்? வைரலாகும் பதிவு!
மூன்றாம் முறையாக திருமணம் செய்யவுள்ள Cook With Comali புகழ்? வைரலாகும் பதிவு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் ஏற்கனவே ஒருமுறை திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போதும் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக கூட திருமணம் செய்ய தயார் என ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்தவர் தான் புகழ். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே புகழுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன. பல ஆண்டுகளாகவே குக் வித் கோமாளி புகழும், பென்சியாவும் காதலித்து வந்தனர். பின்னர், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இந்து முறைப்படி புகழும், காதலி பென்சியாவும் திருமணம் செய்துகொண்டனர்.

ராஜா ராணி2 சீரியல் நடிகருக்கு நடைபெற்ற திடீர் திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இருவரின் திருமண புகைப்படங்களும் தாறுமாறாக சமூக வலை பக்கங்களில் வைரலானது. இதனையடுத்து, புகழும், காதலி பென்சியாவும் ஏற்கனவே இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும், எதற்காக இரண்டாவது முறை திருமணம் செய்ய வேண்டும் எனவும் சமூக வலை பக்கங்களில் சர்ச்சைகள் எழும்பின. மேலும், இருவரும் இஸ்லாமிய முறைப்படி செய்துகொண்ட திருமண புகைப்படங்கள் சமூக வலைப்பக்கங்களில் வைரலானது.

இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு நடுவே புகழ் தகுந்த விளக்கமளித்துள்ளார். அதாவது, முதல் முறை திருமணம் என் அம்மா, அப்பாவின் அன்பான வேண்டுகோளுக்காக செய்துகொண்டேன். பின்னர், என் மனைவியின் குடும்பத்திக்காக மீண்டும் இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டேன். மேலும், ரசிகர்கள் விரும்பினால் மீண்டும் ஒருமுறை கூட திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். புகழின் இந்தப்பதிவு சமூக வலைப்பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here