குக் வித் கோமாளி சீசன் 3 ல் ‘புஷ்பா’ வாக களம் இறங்கிய பாலா – கலகலப்பான ப்ரோமோ!

0
குக் வித் கோமாளி சீசன் 3 ல் 'புஷ்பா' வாக களம் இறங்கிய பாலா - கலகலப்பான ப்ரோமோ!
குக் வித் கோமாளி சீசன் 3 ல் 'புஷ்பா' வாக களம் இறங்கிய பாலா - கலகலப்பான ப்ரோமோ!
குக் வித் கோமாளி சீசன் 3 ல் ‘புஷ்பா’ வாக களம் இறங்கிய பாலா – கலகலப்பான ப்ரோமோ!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 3 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. புதிய சீசனில் புதிய பிரபலங்கள் களம் இறங்கியுள்ளதால் அதிக ஆர்வம் அதிகரித்துள்ளது.

குக் வித் கோமாளி:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கு சமையலை தவிர காமெடி தான் வரும். சமையல் போட்டி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றி மிகவும் கலகலப்பாக செல்லும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதனால் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது. இதில் வரும் பிரபலங்கள் இதற்கு முன்னர் பல வருட திரை பயணத்தில் அடைந்த புகழை விட இந்த நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமடைந்து விட்டனர்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து 2 சீசன்களாக நடந்து வந்த நிலையில், 3வது சீசன் எப்போது என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். நீண்ட கோரிக்கைக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் சூப்பராக செட் ஆகியுள்ளது. இதனால் இந்த சீசன் குறித்தும் ஹாட்ரிக் வெற்றி என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

POST OFFICEன் அதிக வருமானத்தை தரும் RD திட்டம் – ரூ.100 முதலீடு செய்து கணக்கு தொடங்கலாம்!

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரும் எபிசோடுகள் குறித்து அடுத்தடுத்து ப்ரோமோ க்கள் வெளியாகி வருகின்றது. அதில், கோமாளி தேர்வு செய்யப்படும் போது தற்போது சமீபத்தில் மிகவும் பிரபலமான சினிமா கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு கோமாளிகள் இருந்தனர். அதில், பாலா புஷ்பா படத்தின் நாயகன் போல் வந்தார். அவரை போலவே நடித்தும் காண்பித்தார். இதனால் அனைவரும் மிகவும் சிரித்து மகிழ்ந்தனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here