தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்:ரூ. 31,000/-

0

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்:ரூ. 31,000/-

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Project Fellow/ Project Associate I பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Fellow/ Project Associate I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc/ M.Phil in Physics/ Applied Physics/ Materials Science/ M.Tech in Materials Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Project Fellow பணிக்கு ரூ. 14,000/- மற்றும் Project Associate I பணிக்கு ரூ. 31,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை இல்லை என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

Dr. K.R.S. Preethi Meher (Principal Investigator), Assistant Professor,
Department of Material Science, School of Technology,
Central University of Tamil Nadu,
Thiruvarur – 610 005

Download Notification PDF

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!