தமிழகத்தில் சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை – கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு!
அரசு சட்ட கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு BA LLB படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் முஜாகித் உல் இஸ்லாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கட் ஆப் மதிப்பெண்கள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியில் தங்களுக்கு விருப்பமான பிரிவுகளை தேர்வு செய்து வருகின்றனர். தற்போது பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி – தமிழக காவல்துறை டிஜிபி அறிவிப்பு!
மறுபுறம் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றுள்ளது. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் தவிர சட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காண்பித்து வருகின்றனர். முன்னதாக சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அதற்கான கட்-ஆப் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் முஜாகித் உல் இஸ்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை – ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது!
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு BA LLB படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வருமாறு: ஓ.சி. – 92.052, பிசி – 88.395, பிசி (முஸ்லிம்) – 87.500, எம்பிசி (வன்னியர்) – 86.445, எம்பிசி, டிஎன்சி – 88.175, எம்பிசி – 88.000, எஸ்சி – 86.810, எஸ்சி (அருந்ததியர்) – 84.482, எஸ் டி – 81.662. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் இன்று (செப்.30) முதல் அக்.4 வரை நடைபெறும். ஆன்லைன் கலந்தாய்வு அக்.6, 7-ல் நடக்கவுள்ளது.