ATM Card க்கான பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

0
ATM Card க்கான பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ATM Card க்கான பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ATM Card க்கான பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் தற்போது மக்கள் அதிகமாக ஏடிஎம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏடிஎம்:

தற்போதைய நவீன உலகில் அனைத்து வேலைகளும் இணையத்தளம் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கி பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மக்கள் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் புதிய விதிகளின் படி மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு 3 முறையும் பிற நகரங்களில் 5 முறையும் இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

அதற்கடுத்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் ஏடிஎம் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்து உள்ளதால் ஏடிஎம் மையங்களில் 5 முறைக்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இனி 5 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயர் சேர்க்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 17ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் வங்கிகளை பொருத்து மாறுபடும். அந்தந்த வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ரூபாய் 21 வசூலிக்கப்படும். மற்ற ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் பணப் பரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் அடிக்கடி ஏடிஎம்களில் பணம் எடுப்பது தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!