பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு – முழு பட்டியல் இதோ!! 

0
பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு பட்டியல் இதோ!! 
1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 ஆண்டுத்தேர்வு:

புதுச்சேரி மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பை தவிர மீத 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புகள் அனைத்தும் சிபிஎஸ்இ க்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி துவங்கி மார்ச் 26 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 13 துவங்கி மார்ச் 23 ஆம் தேதி வரையிலும் ஆண்டுத்தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும், 2024-25 ஆம் கல்வியாண்டு மாநிலத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கும் எனவும், மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!