தமிழகத்தை சேர்ந்த பத்ம விருது பெற்றவர்கள்

0

இளையராஜா 

 

  • இளையராஜா ஜூ ன் 2, 1943 அன்று பிறந்தார் . இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர்.
  • இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
  • இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
  •  சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்

இராமச்சந்திரன் நாகசாமி

  • இராமச்சந்திரன் நாகசாமி  10 ஆகஸ்டு 1930 அன்று பிறந்தார்.
  • இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞர் ஆவார்.
  • தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் .
  • 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்

வி. நானாம்மால்

 

  • தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இருந்து 97 வயதான பெண். அவரது முன்னேற்றமடைந்த வயதில் கூட, யோகாவின் கலைநடவடிக்கை நடாத்தியது,  மற்ற ஆர்வமுள்ளவர்களுக்கு இது கற்பிக்கின்றது
  • இந்தியாவில் பழமையான யோகா பயிற்றுவிப்பாளராக இருக்கலாம், தினசரி 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகாவை யோகா கற்றுக்கொள்கிறார்
  • 2018 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் 

  • விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்  27 ஜனவரி, 1946 அன்று பிறந்தார்
  • ஒரு தமிழ்நாட்டு நாட்டுப்புறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆவார். தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
  • விஜயலட்சுமி பிறந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி ஆகும்
  • 2018 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்

ராஜகோபாலன் வாசுதேவன் 

  • ராஜகோபாலன் வாசுதேவன், ஒரு இந்திய விஞ்ஞானி ஆவார். அவர் தற்போது தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
  • பிளாஸ்டிக் கழிவுகளை சிறந்த, அதிக நீடித்த மற்றும் மிகவும் செலவு குறைந்த சாலைகள் அமைக்க அவர் ஒரு புதுமையான முறையை உருவாக்கினார்.
  • 2018 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்

உரோமுலசு விட்டேக்கர் 

  • உரோமுலசு விட்டேக்கர்  இந்தியாவின் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளர்.
  • இவர்மதராசு பாம்பு பண்ணை, அந்தமான் மற்றும் நிக்கோபர் சுற்றுச்சூழல் அற்க்கட்டளை, சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை போன்ற உயிர்கள் காப்பு அமைப்புகளை நிறுவியவர்
  • 2018 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!