ஜனவரி 30 நடப்பு நிகழ்வுகள்

0
  1. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.10,453 கோடியில் புதிய அனல்மின் திட்டம்: முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
  • உடன்குடியில் ரூ.10,453 கோடியில் அமையவுள்ள புதியஅனல்மின் நிலைய திட்டத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி அடிக் கல் நாட்டினார். மேலும் 894 களப்பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்

முக்கியமான குறிப்புக்கள்

  1.  அணைகள் – பாபனாசம் மற்றும் மணிமுத்தர்
  2. காவல்துறை கண்காணிப்பாளர் –  பி.மஹந்திரன் ஐ.பி.எஸ்
  3. கலெக்டர்  –  ஸ்ரீ என். வெங்கடேஷ் ஐ.பி.எஸ்

2. இந்திய அஞ்சல் துறை இணையதள வங்கி சேவை: நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் அமல்படுத்த முடிவு

  • இந்திய அஞ்சல் துறையின் கீழ் நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் இயங்குகின்றன.பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் வரை நிர்ணயித்துள்ளன.
  • அஞ்சல் துறை யில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வெறும் ரூ.50 இருப்புத் தொகை வைத்திருந்தால் போதும். காசோலை பயன்படுத்துவோருக்கு ரூ.500 இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

  1. நிறுவனம்  – 1 ஏப்ரல் 1854 ஆம் ஆண்டு
  2. தலைமையகம்  – டக் பவன், சன்சாட் மார்க், புது தில்லி

3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி

  • ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

  1.  2018 ல் உலகக் கோப்பை ரஷ்யாவில் நடைபெறும்

4. தமிழகம் முழுவதும் 88 ஆய்வாளர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு

  • தமிழகம் முழுவதும் 1996-ம் ஆண்டு உதவி ஆய்வாளர்களாக தேர்வான போலீஸார் தற்போது ஆய்வாளர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் 88 பேருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலர் பிறப்பித்துள்ளார்.

முக்கியமான குறிப்புக்கள்

  1. சென்னை காவல்துறை ஆணையர் –  ஏ.கே.விஸ்வநாதன்

5. புதிய வெளியுறவு செயலாளராக விஜய் கேசவ் கோகலே பொறுப்பேற்றார்

  • நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக, மூத்த ஐஎப்எஸ் அதிகாரியான விஜய் கேசவ் கோகலே (58) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • கோகலே நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்தது. பணியாளர் நலத்துறை இது தொடர்பான ஆணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக கோகலே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 2 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்.

முக்கியமான குறிப்புக்கள்

வெளியுறவு அமைச்சர்களின் பட்டியல்

  1. ஜவஹர்லால் நேரு
  2. குல்சார்லால் நந்தா
  3. லால் பகதூர் சாஸ்திரி

6. 3 ஆம் ஆத்மி உறுப்பினர்கள் உட்பட புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு

  • ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், பாஜகவைச் சேர்ந்த எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஹர்தீப் புரி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
  • நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மோஹிந்தர் சிங் கல்யாண், ககன் தாஸ் ஆகியோரின் மறைவுக்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவரு மான எம்.வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்தார்.

முக்கியமான குறிப்புக்கள்

  1. தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்

பெயர்                                   மாநிலம்                    சபை
♦ ஆர்.பீ. மருதராஜா                          தமிழ்நாடு            பெரம்பலூர்
♦ எஸ். ராஜேந்திரன்                          தமிழ்நாடு            விழுப்புரம்
♦ எஸ். செல்வகுமார சின்னயன்        தமிழ்நாடு            ஈரோடு
♦ எஸ்.ஆர் விஜயகுமார்                    தமிழ்நாடு            சென்னை சென்ட்ரல்

7. 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி நிலையங்கள்: உத்தரபிரதேச அரசு அறிவிப்பு

  • உத்தரபிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி (சோலார்) நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில கூடுதல் மின்சார வளங்கள் துறை அமைச்சர் விர்ஜேஸ் பதக் தெரிவித்தார்.

முக்கியமான குறிப்புக்கள்

  1. முதலமைச்சர் – யோகி ஆதித்யநாத்து
  2. து வக்க உடைமையாளர் – கோவிந்த் பலாப் பன்ட்
  3.  மின்சார வளங்கள் துறை அமைச்சர்  – விர்ஜேஸ் பதக்

8. 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்கு செல்லலாம் : தடையை நீக்குகிறது டிரம்ப் அரசு

  • மிகவும் ஆபத்தான 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
  • எகிப்து, ஈரான், லிபியா, தெற்கு சூடான், ஏமன், சூடான், இராக், மாலி, வடகொரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளில் இருந்து அகதிகள் அமெரிக்கா வரத் தடை செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை இனி ஏற்கும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

  1. ஐக்கிய அமெரிக்கா 2,016 ஆண்டுகள் பழமையானது.
  2. கொலம்பஸ் “அமெரிக்காவை” கண்டுபிடித்தார்

9. பட்ஜெட் தாக்கல் : மத்திய நிதி அமைச்சர் 

  • மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.
  • மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடைசி மற்றும் முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

முக்கியமான குறிப்புக்கள்

  1. பட்ஜெட் தாக்கல் செய்த ஒரேபெண்   முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி

10. இந்தியா ஓபன் குத்துச்சண்டை தொடர்

  • புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் குத்துச்சண்டை தொடரில்ஆடவருக்கான 60 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிவா தபா தனது முதல் சுற்றில் பூட்டானின் டோர்ஜி வாங்கியை எளிதாக வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

முக்கியமான குறிப்புக்கள்

  1. UK – ல் மான்செஸ்டரில் நடந்த 2002 காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் முகமது அலி கமர் ஆவார்.

11. 2017 ஆம் ஆண்டின் வார்த்தை ஆதார்

  • 2017 ஆம் ஆண்டு ஆதார் என்ற  ஹிந்தி வார்த்தையான ஆக்ஸ்போர்டு அகராதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.2017 ஆம் ஆண்டின் வார்த்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன

முக்கியமான குறிப்புக்கள்

  1. ஆதார் அட்டை தொடங்கியவர் – நீலக்கனி.
  2. ஆங்கில மொழியில் ஆதார் அட்டை-  இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI)

12. இந்திய-அமெரிக்க அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தநரு நாராயணன் USISPF சபைக்கு தலைமை தாங்குவார்

  • இந்திய அமெரிக்க அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தநரு நாராயண் அமெரிக்க-இந்தியா மூலோபாய மற்றும் கூட்டு மன்றத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய அமைப்பாகும்.
  • U.S இந்தியா மூலோபாய கூட்டுறவு மன்றம் (USISPF) குடிமக்களின் உயிர்களை மாற்றுவதற்கான அதிகாரம் கொண்ட பயனுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் வேலைகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. USISPF இப்போது 31 குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

  1. USISPF சபை நியூயார்க், சிலிக்கான் பள்ளத்தாக்கு, வாஷிங்டன் டி.சி, மும்பை மற்றும் புது டெல்லியில் உள்ள குழுக்களுடன்  நிறுவப்பட்ட முன்னிலையில் உள்ளது

13. மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே ஜப்பான் தொழில்நுட்பத்தில் மெட்ரோ ரெயில் பணிகள்

  • 2-வது கட்டமாக மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் வரைவில் தொடங்கப்பட உள்ளது. ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற உள்ளன.
  • ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் இந்த திட்டப் பணிகள் தொடங்கப்படுகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கடன் உதவி வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

14. தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடை மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்

  • மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா டெல்லியில் நேற்று தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் உள்ள சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை தேசிய தொழில்நுட்ப ஆடை வடிவமைப்பு நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

15.நாளை முழு சந்திர கிரகணம் 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு

  • சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.  முழு சந்திர கிரகணம்

16. மகாத்மா காந்தி 70வது ஆண்டு நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

  • இந்திய விடுதலை போராட்டத்தில் அகிம்சை வழியில் ஈடுபட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்த மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் வழியே தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
  •  தியாகிகள் தினம் 

17. நீதிபதிகளுக்கு 200 சதவீத ஊதிய உயர்வு வழங்கி மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

  • இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து,  ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில், நீதிபதிகள் சம்பள உயர்வு தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2016 ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18. குலாம் நபி ஆஸாத்துக்கு சிறந்த நாடாளுமன்றவாதி விருது

  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள், சிறந்த நாடாளுமன்றவாதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

19. ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி திறந்து வைக்கிறார்

  • இப்போது ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியிலும் இந்து கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அல்வத்பா என்ற இடத்தில் இந்து கோவில் கட்டி கொள்ள அபுதாபி அரசு 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை வழங்கி உள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

  1. பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு அபிதாபியில் சுற்றுப்பயணம் செய்த போது இதற்கான அனுமதியை ஐக்கிய அரபு அரசு வழங்கியது. 

20. பிரான்ஸ்-ஸ்பெயின் இடையே 6 மாதத்துக்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரிய தீவு

  • ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்-ஸ்பெயின் நாடுகள் இடையே இயற்கையான எல்லையாக பீடாகோ ஆறு உள்ளது. இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பிரித்து பாய்ந்தோடுகிறது.
  • இந்த ஆற்றின் நடுவில் பிசான் தீவு உள்ளது.. பிரான்ஸ் பகுதியில் தொழில்துறை கிடங்குகளும், ஸ்பெயின் பகுதியில் குடியிருப்புகள் உள்ளது

முக்கியமான குறிப்புக்கள்

  1. தீவின் நீளம் – 200மீட்டர்
  2. தீவின் அகலம் – 40 மீட்டர்

 PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!