ஜனவரி 24 நடப்பு நிகழ்வுகள்

0

ஜனவரி 24 நடப்பு நிகழ்வுகள்

இந்தியா
  1. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம்: கேரளாவில் போக்குவரத்து முடக்கம்
  • கேரளாவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால், போக்குவரத்து முடங்கியுள்ளது.
  • தினசரி விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலுக்கு வந்தபிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உற்பத்தி வரியை குறைக்கும்படி நிதி அமைச்சகத்தை எண்ணெய் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது
  • தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கேரள மாநில போக்குவரத்து கழக சங்கங்கள்ளும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு பேருந்துகளும் இயங்கவில்லை.
  • தனியார் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது

2. பயணிகளை கண்காணிக்க சிஐஎஸ்எப் வீரர்கள் உடையில் கேமரா 59 விமான நிலையங்களில் விரைவில் அமல்

  • விமான நிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழிலகப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் உடையில் வரும் மார்ச் மாதத்துக்குள் கேமரா பொருத்தப்படவுள்ளது. பயணிகளைக் கண்காணிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நாட்டிலுள்ள 59 விமானநிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
  • இதுகுறித்து சிஐஎஸ்எப் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹேமேந்திர சிங் கூறும்போது, “இதுதொடர்பாக உத்தரபிரதேச போலீஸ் டிஜிபியுடன், சிஐஎஸ்எப் டிஜிபி ஓ.பி.சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
  • சில நேரங்களில் சிஐஎஸ்எப் வீரர்களுடன் பயணிகள் தேவையில்லாமல் விவாதம் செய்து பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். அவர்களை சோதனை செய்யும்போது, சில பயணிகள் கெட்ட வார்த்தைகளால் சிஐஎஸ்எப் வீரர்களை திட்டி கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள். அதுபோன்ற நேரங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய இந்த கேமராக்கள் நமக்கு உதவி செய்யும்.
  • சிஐஎஸ்எப் வீரர்கள் மீது புகார் வரும்போது இந்த கேமராவில் பதிவான காட்சி, ஒலியைக் கொண்டு யார் மீது தவறு என்பதை நிரூபிக்க முடியும். இனிமேல் கேமரா உதவியுடன் சிஐஎஸ்எப் அதிகாரிகள் தங்களது கடமையை பயமில்லாமலும், தடையில்லாமலும் செய்ய முடியும். கேமராக்களை வாங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வரும் மார்ச்சுக்குள் இந்தப் பணிகள் முடியும்.
  • மும்பை, டெல்லி விமானநிலையங்களில் சோதனை அடிப்படையில் கேமராக்களைப் பயன்படுத்தினோம். இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து 59 விமான நிலையங்களில் செயல்படுத்தவுள்ளோம்” என்றார்.

3. ஏப்ரல் 1-ம் தேதி முதல் வெளி மாநில ரசாயன காய்கறிகளுக்கு அனுமதியில்லை: சிக்கிம் முதல்வரின் புதுமை திட்டம்

  • ரசாயனத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அனுமதியில்லை என அறிவித்துள்ள சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் இதற்காக சிறப்பு திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளார்.
  • இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது சிக்கிம். இம்மாநில மக்கள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்து வருகின்றனர். அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் முயற்சியால், நவீன முறை விவசாயத்திற்கு மாற்றாக, பாரம்பரிய விவசாய முறையை கடைபிடித்து வருகின்றனர் .

4. மத்திய பிரதேச மாநில ஆளுநராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்

  • மத்திய பிரதேச மாநில ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
  • மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ராம்நரேஷ் யாதவ் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி, கூடுதல் பொறுப்பாக மத்தியபிரதேச ஆளுநர் பதவியையும் வகித்து வந்தார்.
  • இந்நிலையில் ஆனந்தி பென் படேலை மத்திய பிரதேச ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். தலைநகர் போபாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா, புதிய ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார்

5. டார்வின் கோட்பாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பாடங்களில் நீக்கப் போவதில்லை; ஜவடேகர் அறிவிப்பு

  • டார்வின் கோட்பாடு மீது மத்திய இணை அமைச்சர் சத்யபால்சிங் கிளப்பிய சர்ச்சைக்கு அவரது மூத்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதை பாடங்களில் இருந்து நீக்கப்போவதில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சரான சத்யபால்சிங், ‘குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் எனும் சார்லஸ் டார்வின் கோட்பாடு தவறு எனவும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதை அவர் அவுரங்காபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற அகில இந்திய வைதீகர்கள் மாநாட்டில் பேசி இருந்தார். அறிவியல் ஆய்வாளர்கள் விரும்பினால் டார்வின் கோட்பாடு மீது ஆராய அரசே மாநாட்டை நடத்தும் என்றும், இதனால் அதை பள்ளிப்பாடங்களில் இருந்து நீக்க வேண்டும்’ எனவும் சத்யபால் கருத்து கூறி இருந்தார்
  •  அறிவியல் கோட்பாடுகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளேன். டார்வின் கோட்பாட்டை தவறாக நிரூபிக்க சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகள் நடத்தும் எண்ணம் அரசிற்கு இல்லை. பாடங்களிலும் மாற்றம் செய்ய தேவை இல்லை” எனக் கூறியுள்ளார்.
  • எனவே, சத்யபால்சிங் கூறியது போல் தற்போது பாடத்திட்டங்களில் உள்ள சார்லஸ் டார்வின் கோட்பாட்டை நீக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.
முக்கியமான குறிப்புகள்
  1. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சத்யபால்சிங் மும்பை நகர காவல்துறை ஆணையராக இருந்தவர்.
  2. தனது ஓய்விற்குப் பின் பாஜகவில் இணைந்தவர்
  3. உ.பி.யின் பாக்பத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனவர்.
வங்கி
  1. வருமான வரி விலக்கினை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை
  • ஏழாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வருமான வரி விலக்கினை 3 லட்ச ரூபாயாக உயர்த்தலாம் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவையில்லை. இந்த வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.
  • இது தொடர்பாக எஸ்பிஐ மேலும் கூறியிருப்பதாவது: வருமான வரி விலக்கினை உயர்த்தும் பட்சத்தில் 75 லட்சம் மக்கள் பயனடைவார்கள். அதேபோல வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துபவர்களுக்கு தற்போது 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரம்பினையும் 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தலாம். இதன் மூலம் வீட்டுக்கடன் வாங்கி இருக்கும் 75 லட்சம் நபர்கள் பயனடைவார்கள்.
  • பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 1990-91-ம் ஆண்டு வருமான வரி விலக்கு ரூ.22,000 ஆக இருந்தது. இந்த தொகை படிப்படையாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.-பிடிஐ

2. 20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு?- மத்திய அரசு அறிவிப்பு

  • 2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார்.
  • இதில் அதிகபட்சமாக ஐடிபிஐ வங்கி ரூ.10 ஆயிரத்து 610 கோடி நிதி பெறுகிறது.
  • அரசு பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கும் நோக்கில் ரூ.2.1 லட்சம் கோடி முதலீட்டு நிதி அளிக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிதி 2018-19, 2019-20 ஆம் நிதி ஆண்டில் பிரித்து தரப்படும் எனத் தெரிவித்தது.
உலகம்
  1. ஆஸ்கர் 2018: முழு பரிந்துரை பட்டியல்
  • 90வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக ஷேப் ஆஃப் தி வாட்டர் திரைப்படம் 13 பரிந்துரைகள் பெற்றுள்ளது.
  • 90 ஆஸ்கர் விருது விழாவில் பரிந்துரைக்கப்படவுள்ள திரைப்படங்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை பிரியங்கா சோப்ரா, ரோசாரியோ டாசன், ரெபெல் வில்சன், மிஷெல் யோ உள்ளிட்டோர் அறிவித்தனர்
வணிகம்
  1. 11000 புள்ளிகளில் நிப்டி பிஎஸ்இ சென்செக்ஸ் 36000 புள்ளிகளை கடந்தது
  • பங்குச்சந்தையின் ஏற்றும் நேற்றும் தொடர்ந்தது. முதல் முறையாக நிப்டி 11000 புள்ளிகளை தாண்டியும், சென்செக்ஸ் முதல் முறையாக 36000 புள்ளிகளை தாண்டியும் முடிந்தது. 2018-19-ம் நிதி ஆண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு தெரிவித்திருக்கிறது.
  • இதனால் ஏற்றம் நேற்றும் இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்ந்து 36139 புள்ளியில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே 36170 புள்ளிகள் வரை சென்றது. 35000 புள்ளியில் இருந்து ஐந்து வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது
  • ரூ.1 லட்சம் கோடி உயர்வு நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகம் காரணமாக முதலீட்டாளர் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சொத்துமதிப்பு ரூ.1 லட்சம் கோடி உயர்ந்து ரூ.156.56 லட்சம் கோடியாக இருக்கிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 24 பங்குகள் உயர்ந்து முடிந்தன.

2. இந்தியாவில் விற்பனையில் முதல் 10 இடத்தில் இருக்கும் கார்கள்

  • கடந்த டிசம்பர் மாதத்தில், கார் விற்பனையில் முதல் பத்து இடங்களில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளன.
  • கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் கார் விற்பனை, முந்தைய 2016ம் ஆண்டு டிசம்பரை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இதில், மாருதி  நிறுவனத்தின் அல்டோ (Alto) மாடல் கார் முதலிடம் பிடித்துள்ளது.
  • இரண்டாவது இடத்தில் உள்ள மாருதி நிறுவனத்தின் சிடன் டிஸயர் (sedan Dzire) 14,643 கார்கள் விற்பனையாகியுள்ளன. மாருதி நிறுவனத்தின்  Baleno மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • ஹுண்டாய் நிறுவனத்தின் கிராண்டி 10 (Grandi10) கார் 12,955 கார்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் 11,800 கார்கள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • சொகுசு காரான வித்ரா பிரீஸா (Vitara Brezza) ஆறாவது இடத்தில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ 20 (Elite i20)  ஏழவாது இடத்தில் உள்ளது. ஸ்விப்ட் (Swift) கார்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. ரெனால்டு நிறுவனத்தின் கிவித் (Kwid) கார்களுடனும், ஹுண்டாய் நிறுவனத்தின் கிரீட்டா (Creta) கார்கள் விற்பனையாகியுள்ளன.

3. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக அதிகரிக்கும்: சர்வதேச நிதியம் மதிப்பீடு

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018ம் ஆண்டில் 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.
  • சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நிதியம் சார்பில் உலக அளவில் பொருளாதார சூழல் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
  • அந்த அறிக்கையில்‘இந்தியாவில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2017ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்தது. இதனால் 2017ல் பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது.
  • இந்தியாவின் வர்த்தக சந்தையும், உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

4. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

  • சென்னையில் பெட்ரோல் விலை 75.12 ரூபாயாகவும், டீசல் விலை 66.84 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
  • பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து 75.12 ரூபாயாகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து 66.84 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

5. ரூபாய் மதிப்பு உயர்வு

  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13  காசுகள் உயர்ந்து 63.65 ரூபாயாக இருந்தது.
  • வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இதன் தாக்கத்தால் டாலர் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 63.65 ரூபாயாக இருந்தது

தமிழகம்

  1. பிப். 4-ல் ஓஎம்ஆர் மாரத்தான்
  • ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை அப்ஸ்கேல் அமைப்பின் சார்பில் ஓஎம்ஆர் மாரத்தான் போட்டி வரும் பிப்ரவரி 4-ம் தேதி பழைய மகாபலிபுரம் சாலை சுற்றுப் பகுதிகளில் நடைபெற உள்ளது.
  • 3, 5 மற்றும் 10 கி.மீ. பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. பந்தய தொலைவை நிறைவு செய்யும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
  • இந்தத் போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.750 ஆகும். மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் போட்டியின் வாயிலாக கிடைக்கும் தொகையை ஓஎம்ஆர் பகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி, சுகாதாரம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை அப்ஸ்கேல் அமைப்பின் ஆளுநர் சீனிவாசன் தெரிவித்தார் .

2. அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது: பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

  • தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வில் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது.
  • போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்றவற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு  எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி 19ம் தேதி நள்ளிரவில் முடிவுசெய்து ஜன. 20-ம் தேதி முதல் அரசு பஸ்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது
  • இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தினாலும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போரட்டத்தினால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவே பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
  • எனினும் பேருந்து கட்டண உயர்வை மக்களிடம் அறிவித்த தமிழக அரசு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் எந்த அளவுக்கு கட்டண உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் முறையாக தெரியப்படுத்த வேண்டும்” என்று கூறி பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

3. உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

  • உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகைகள் வைக்கும் தனியார், விளம்பர நிறுவனங்கள் மீது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு விளம்பர பலகைகக்கு ரூபாய். பத்தாயிரம் வீதம் அபாரதம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
  • அவ்வாறு விளம்பரபடுத்தியது தெரியவந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் பொருட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட ஒரு விளம்பரப் பலகைகக்கு ரூபாய். பத்தாயிரம் வீதம் (ரூ.10,000/-) தண்ட தொகையாகவே அல்லது இரண்டும் சேர்ந்தோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
  • அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை அமைக்க கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதிக்கும் பட்சத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் கட்டிடத்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.”

விளையாட்டு

  1. இந்தியா – தென் ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்; வீரர்கள் தேர்வில் இரு மாற்றம்
  • இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது.
  • ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) 3-வது டெஸ்ட் நடைபெறுகிறது.
  • இந்திய அணி தரப்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்கு பதில் ரஹானேவும், அஸ்வினுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேசவ் மகாராஜ் பதிலாக அண்டிலே பெலுக்வாயா சேர்க்கப்பட்டுள்ளார்.

 2. இந்திய அணியின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வோம் – பிசிசிஐ

  • தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணியின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வோம் என பிசிசிஐ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
  • நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 4 நாடுகள் ஹாக்கித் தொடரின் 2-வது கட்ட ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.
  • சென்னையில் நடைபெற்று வரும் 68-வது தேசிய கூடைப்பந்து போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ரயில்வே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி அரை இறுதியில் 76-63 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.
  • சென்னையில் நடைபெற்று வரும் மெக்பெரன் கோப்பைக்கான தேசிய கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு – சென்னையின் எப்சி பி அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
  • இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் தகுதி சுற்று ஆட்டங்களுடன் நேற்று தொடங்கியது. இதற்கிடையே இந்தத் தொடரில் இருந்துமுன்னணி வீரர்களான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் விலகியுள்ளனர். இதனால் தகுதி சுற்றில் விளையாட இருந்த மற்றொரு இந்திய வீரரான காஷ்யப் பிரதான சுற்றுக்குள் நேரடியாக நுழைந்தார்.
  • முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று டாக்காவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 76, ஷகிப் அல் ஹசன் 51 ரன்கள் சேர்த்தனர். 217 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 36.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஜனவரி 24 நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!