ஜனவரி – 20 நடப்பு நிகழ்வுகள்

0

 

இந்தியா

1.அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரி வினாத்தாள்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு: கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என சிபிஎஸ்இ தகவல்

  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான ‘நீட்’ தேர்வு, வரும் மே மாதம் நடக்கிறது. அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்றும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்களும் உள்ளன. மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் மே மாதம் நடக்க உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது.

2. இயற்கை விவசாய விளை பொருட்கள் மட்டுமே இனி விற்பனை: சிக்கிம் அரசு திட்டம்

  • இயற்கை விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக திகழும் சிக்கிமில், வரும் மார்ச் மாதம் முதல் இயற்கையாக சாகுபடி செய்யப்பட்ட விளைப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் அறிவித்துள்ளார்.

3. டார்வினின் பரிணாமக் கோட்பாடு ‘அறிவியல் ரீதியாகத் தவறு’: மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தடாலடி

  • மத்திய அமைச்சர் சத்யபால் சிங், டார்வினின் பரிணாமக் கோட்பாடு ‘அறிவியல் ரீதியாக தவறானது’ என்று தெரிவித்துள்ளார்.
  • ஆகவே அதனை பள்ளி, கல்லூரி கல்விப் பாடத்திட்டத்தில் மாற்றப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
  • ஔரங்காபாந்தில் அவர் இது தொடர்பாக கூறும்போது, “டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக தவறானது.அதனை கல்விப் பாடமுறையிலிருந்து மாற்ற வேண்டும்.மனிதன் இந்த பூமியில் எந்தக் காலத்திலும் மனிதனாகவே இருந்துள்ளான்.குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

4. பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் லேண்ட்லைன்சேவையின்இலவச அழைப்புகளை ரத்து செய்ய முடிவு

  • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் தரைவழி தொலைபேசியில் இருந்து அளவில்லா எண்ணற்ற இலவச அழைப்புகளை (அன்லிமிடெட் ப்ரீ வாய்ஸ் கால்) மேற்கொள்ளும் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இச்சேவையை ரத்து செய்ய உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

5.  இ-போஸ்ட் சேவை மூலம் அஞ்சல் துறைக்கு 3 ஆண்டுகளில் ரூ.7 கோடி வருவாய்: அதிக அளவில் பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள்

  • இ-போஸ்ட் சேவை மூலம் கடந்த 3 ஆண்டுகளில் அஞ்சல் துறைக்கு ரூ.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது.குறைந்த செலவில் கிடைக்கும் இச்சேவையை பொதுமக்கள் இன்னும் அதிக அளவில் பயன்படுத்தி பயன் அடையுமாறு அஞ்சல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • டெலிகிராம் சேவைக்கு மாற்றாக அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள இ-போஸ்ட் சேவைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக அனுப்பப்படும் செய்திகளை இந்தியா வில் உள்ள எந்த ஒரு முகவரிக்கும் தபால்காரர் மூலம் நேரடி பட்டுவாடா செய்வதே இந்த இ-போஸ்ட் சேவையின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

6.புத்த கயா கோயிலில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு; அசம்பாவிதம் தவிர்ப்பு

  • புத்த கயா கோயிலில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு தீவிர சோதனை நடந்து வருகிறது.
  • பிஹார் மாநிலத்தில் உள்ள புத்த கயா, புத்த மதத்தின் புகழ்பெற்ற புனித தலமாக கருதப்படுகிறது.இங்குள்ள மகாபோதி ஆலயத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் ஆண்டு முழுவதும் வருகை தருகின்றனர்.

உலகம் 

1.மியான்மருக்கு திரும்பிச் செல்ல ரோஹிங்கியா முஸ்லிம்கள் மறுப்பு: வங்கதேசத்தில் நடத்திய போராட்டத்தால் பதற்றம்

  • தாய்நாடான மியான்மருக்கு திரும்ப அனுப்பும் நடவடிக்கையைக் கண்டித்து, வங்க தேசத்தில் அகதிகளாக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் நேற்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மியான்மரின் ரெக்கைன் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசித்தனர்.அந்தப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர்.அதில் போலீஸார் சிலர் பலியானதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து மியான்மர் ராணுவத்தினரும் புத்த மதத்தினரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

2.கனடா மாகாண அமைச்சர்களாக இந்திய பெண்கள்

  • கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்துக்கு ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமது அமைச்சரவையை மாகாண முதல்வர் கேத்தலின் வைன் மாற்றியமைத்தார்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களான ஹரீந்தர் மல்ஹி (38), இந்திரா நாயுடு (41) ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.பிராம்டன் பேரவைத் தொகுதி உறுப்பினரான ஹரீந்தர் மல்ஹி, ஒரு சீக்கியவர் ஆவார்.கனடாவின் முதல் சீக்கிய எம்.பி.யான குர்பாஸ் சிங்கின் மகளான இவர், பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், ஹால்டன் பேரவைத் தொகுதி உறுப்பினரான இந்திரா நாயுடு, கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

3.அமெரிக்காவில் ‘ஷட்டவுன்’: 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்

  • அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததையடுத்து, அங்கு “ஷட்டவுன்” அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
  • ஷட்டவுன் நிகழ்வு என்பது, அமெரிக்க மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாமல் நிறுத்திவைக்கப்படும்.அத்தியாவசிய பணிகளாக போலீஸ், ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும்.

வணிகம் 

1. டாவோஸ் மாநாட்டில் மோடி பங்கேற்பதால் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும்: வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை

  • டாவோஸில் நடைபெற உள்ள சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதால் இந்தியாவுக்கு அதிக அந்நிய முதலீடுகள் வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2.பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அதிக சலுகை: சர்வதேச தரச்சான்று நிறுவனம் `இக்ரா’ கணிப்பு

  • அதிக நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளாண் துறைக்கு எதிர்வரும் பட்ஜெட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. நிதி நெருக்கடியில் தவிக்கும் உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொள்கைகளை அரசு தனது பட்ஜெட்டில் வெளியிடும் என்று தரச்சான்று நிறுவனமான இக்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள், ஊக்க திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும். குறிப்பாக பாசன வசதி, பயிர் காப்பீடு, வேளாண் கடன் உள்ளிட்டவை வழங்குவதோடு உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளும் இடம்பெறும் என்று இக்ரா தனது பட்ஜெட்டுக்கு முந்தைய எதிர்பார்ப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

3.ஐடிசி நிகர லாபம் 17% உயர்வு

  • ஐடிசி நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 16.75% உயர்ந்து ரூ.3,090 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.2,646 கோடியாக இருந்தது. டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.10,579 கோடியாக இருக்கிறது.
  • ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.14,257 கோடியாக இருந்தது. மறைமுக வரிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் கடந்த ஆண்டு வருமானத்துடன் ஒப்பிட முடியாது என நிறுவனம் தெரிவித்திருக்கிறது

4.பிட்காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் 10,000 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

  • இந்தியாவில் பிட்காயின்  உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • கிரிப்டோகரன்ஸியான பிட்காயின் தற்போது பெருமளவு பிரபலமடைந்து வருகிறது.ஒருவர் இணையம் மூலம் பிட்காயினைப் பயன்படுத்தி, இன்னொருவரிடமிருந்து பொருட்களை வாங்க முடியும்.தன்னிடம் உள்ள தொகையை பிட்காயின் மூலம் இன்னொருவருக்குக் கொடுக்கவும் முடியும்.கடவுச்சொல் மூலம் இந்தப் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடக்கும் என கூறப்படுகிறது.

தமிழகம்  

1.ரூ.8 ஆயிரம் கோடியில் ராணுவ பொறியியல்: கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட்10 தமிழக ஆலைகளுக்கு ஆர்டர்

  • தமிழ்நாட்டில் எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல்மணல்) தயாரிக்கும் 10 தொழிற்சாலைகளுக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அவற்றுக்கு ராணுவ பொறியியல் சேவை அமைப்பின் ரூ.8 ஆயிரம் கோடி கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட் சப்ளை செய்யும் ஆர்டர் விரைவில் கிடைக்கவுள்ளது.

விளையாட்டு  

1.இளம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

  • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிது தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஏற்கெனவே கால் இறுதிக்கு முன்னேறிய நிலையில் நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 48.1 ஓவரில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.சும்பா 36, ரோச் 31, மத்ஹேவேரே 30 ரன்கள் சேர்த்தனர்.

2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ரபேல் நடால், ஸ்விட்டோலினா; இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடிகள் முன்னேற்றம்

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 4-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

3.பார்வையற்றவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இந்தியா சாம்பியன்

  • ஷார்ஜாவில் நடந்த பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பைப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை துவம்சம் செய்து இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • பார்வையற்றவர்களுக்கான 5-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானும், ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் நடத்தின. இந்த போட்டிகள் கடந்த 8ந்தேதி தொடங்கின. இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றன. .
  • இறுதிப்போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன.ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று இறுதி ஆட்டம் நடந்தது.

4.ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவை வெளியேற்றினார் கெர்பர்; பெடரர், ஜோகோவிக் முன்னேற்றம்

  • மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவாவை 3-வது சுற்றோடு வெளியேற்றினார் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சிலிக் கெர்பர்.
  • இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியான் ஓபன் டென்னிஸ்ப போட்டி நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.
  • இதில் 2016ம் ஆண்டு சாம்பியனும், தரவரிசையில் 16ம் இடத்தில் உள்ள ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார் ரஷிய வீராங்கனையும், தரவரிசையில் 47ம் இடத்தில் உள்ள மரிய ஷரபோவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!