ஜனவரி 19 நடப்பு நிகழ்வுகள்

0

ஜனவரி 19 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்  

1. கச்சா எரிபொருள் உற்பத்தியைவிட பயன்பாடு பல மடங்கு அதிகரிப்பு: இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்

 • கச்சா எரிபொருள் உற்பத்தியைவிட, நுகர்வு பல மடங்கு அதிகரித்து வருகிறது.எனவே, மாற்று எரிசக்தி அவசியம் தேவைப்படுகிறது என இந்தியன் ஆயில் நிறுவன தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல செயல் இயக்குநர் ஆர்.சித்தார்தன் தெரிவித்துள்ளார்.
 • இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு குடிமைப் பொருள் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் எஸ்.மதுமதி தொடங்கி வைத்து பேசும்போது, ‘எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இவற்றை எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் சேமிக்கும் ஒவ்வொரு சிறிய அளவும் நீண்ட காலத்தில் பெரிய சேமிப்பாக மாறும்.

 2. ரூ.6 கோடி சூரிய மின் நிலையம்: தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் திறப்பு

 • கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் ஆற்றல் நிலையம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (யு.எஸ்.ஏ.ஐ.டி) வாயிலாக, அமெரிக்க மக்களின் நன்கொடையால் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.கல்லூரியின் 50 சதவீத மின் தேவையை இந்த சூரிய மின் ஆற்றல் நிலையம் பூர்த்தி செய்யும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 • கல்லூரி வளாகத்தில் சூரிய மின் நிலையத்தை அமெரிக்க தூதர் ராபர்ட் ஜி.பர்ஜஸ் நேற்று திறந்து வைத்தார்.யு.எஸ்.ஏ.ஐ.டி-ஆஷா அமைப்புகள் சார்பில், 60% நிதி பங்களிப்புடன் இந்த மின் நிலையம் அமைந்துள்ளது.

3.  சேலத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை: ராணுவ தளவாட உற்பத்தி தொடர்பான கூட்டத்தில் முதல்வர் கோரிக்கை

 • சேலத்தில் இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 • ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மேம்பாடு தொடர்பான 2 நாள் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறை தளவாடங்கள் தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

4. தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிறப்பு, இறப்பு     சான்றிதழ்: அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது

 • தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் முறை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.பெண்கள் கருத்தரித்ததும் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 • தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.இதேபோல், தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.இதுதொடர்பான அரசாணை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இந்தத் திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.

5. உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்   அளிக்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்     வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

 • உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
 • இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல ஏற்றுமதி சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.இதில், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கடந்த 2015-16, மற்றும் 2016-17ம் ஆண்டுகளில் மண்டல அளவிலும், தமிழகம், கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

 6.மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11 முதல் 14 வரை     தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி   – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

 • ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறை மேம்பாடு தொடர்பான 2 நாள் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது.கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், www.makeinindiadefence.com என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். ‘இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி’, ‘எளிதாக்கப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தி கொள்கைகள்’ ஆகிய 2 நூல்களையும் மத்திய அமைச்சர் வெளியிட, முதல்வர் கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார். தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.சி.சம்பத், பி.பெஞ்சமின், மத்திய பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் அஜீத்குமார், முப்படை துணை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 7. 147 வருடங்களுக்கு முன்பு மூழ்கிய ரங்கூன் தபால் சேவை கப்பல்: இலங்கை காலி துறைமுகம் அருகே கண்டுபிடிப்பு

 • இலங்கையில் உள்ள காலி துறைமுகம் அருகே 147 வருடங்களுக்கு முன்பு மூழ்கிய ரங்கூன் தபால் சேவை கப்பல் அந்நாட்டு கடல்சார் தொல்பொருள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1. டாக்ஸி, பஸ்களில் ஜிபிஎஸ் கட்டாயம்

 • டாக்ஸி, பஸ் உட்பட பொதுமக்கள் பயணம் செய்யும் அனைத்து நான்குசக்கர வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர கால பொத்தானை பொருத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “டாக்ஸி, பஸ்கள் உட்பட பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ், அவசர கால பொத்தானை பொருத்த வேண்டியது கட்டாயம். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் வாய்ந்த அக்னி 5 எவுகணை சோதனை வெற்றி

 • அணு ஆயுதங்களை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
 • நாட்டின் பாதுகாப்புக்காக அக்னி என்ற பெயரில் இதுவரை 4 வகை ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அடிக்கடி விண்ணில் செலுத்தி பரிசோதித்து பார்ப்பது வழக்கம்.

3.’டோக்லாம் எங்களுக்கே சொந்தம்’ – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் சீனா

 • ‘சிக்கிம் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதி எங்களுக்கே சொந்தம்.சட்டபூர்வமாகவே நாங்கள் கட்டிடங்கள் கட்டுகிறோம்’ என்று சீனா தெரிவித்து, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

4. சாலை அமைக்க முயற்சி

 • இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லைப்பகுதி அமைந்துள்ளது.இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது.இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

5. காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பினராயி விஜயன் திட்டவட்டம்

 • வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

6. கடலின் ‘எவரெஸ்ட் சிகரத்தை’ கடந்து இந்திய மகளிர் கடற்படை சாதனை: மோடி வாழ்த்து

 • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் போன்று மிகக் கடினமானது என்று சொல்லப்படும் ‘கேப் ஹார்ன்’ கடல் பகுதியை இந்திய மகளிர் கடற்படையினர் இன்று காலை வெற்றிகரமாக கடந்தனர்.இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7. ‘உலகப் பொருளாதார மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமருடன் மோடி பேசும் திட்டம் இல்லை’

 • சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.உலகப் பொருளாதார மாநாடு

 • சுவிட்சர்லாந்து நாட்டின் தவோஸ் நகரில் வரும் 23-ம் தேதி உலகப் பொருளாதார மாநாடு (டபில்யு.இ.எப்.) நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் 60 நாடுகளும், 350க்கும் மேற்பட்ட தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.இந்தப் பொருளாதார மாநாட்டில், 20 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் ஒருவர் பங்கேற்க உள்ளார்.இதற்கு முன் கடைசியாக கடந்த 1997-ம் ஆண்டு பிரதமராக இருந்த தேவகவுடா பங்கேற்றார்.அதன்பின் எந்த பிரதமரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9. மத்திய பட்ஜெட்டில் விவசாயம், அடிப்படை கட்டமைப்புக்கு முன்னுரிமை: நிதின் கட்கரி தகவல்

 • பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை, அடிப்படைக் கட்டமைப்புக்கு முன்னுரிமை தரும் வகையில் இருக்கும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

உலகம்

1. நியூ ஜெர்சி மாகாண அட்டர்னி ஜெனரலாக இந்தியர் நியமனம்

 • அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாண அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் குர்பிர் எஸ் கிரெ வால் (44)நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இவரது நியமனத்துக்கு மாகாண செனட் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.சீக்கியர் ஒருவர் அமெரிக்காவின் மாகாண அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரெவால், பெர்ஜென் பகுதியின் சட்ட அமலாக்க உயர் அதிகாரியாக கடந்த 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்பு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் பொருளாதார குற்றப் பிரிவு தலைவராக பணியாற்றினார்.

2. உலக அளவில் அதிக அறிவியல், பொறியியல் பட்டதாரிகள்: முதலிடத்தில் இந்தியா

 • உலக அளவில் 2014-ம் ஆண்டு அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்கி இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 • அமெரிக்காவின் அறிவியல் அறக்கட்டளை உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் குறித்த ஆய்வு நடத்தியுள்ளது.
 • இதில், உலக அளவில் 2014-ம் ஆண்டு மொத்தம் 75 லட்சம் பேருக்கு அறிவியல் மற்றும் பொறியில் துறையில் இளநிலை பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர்.இந்தப் பட்டியலில் 25 சதவீதம் பேருடன் இந்தியா முதலிடத்திலும், 22 சதவீதம் பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.12 சதவீதம் பேருடன் ஐரோப்பிய யூனியனும், 10 சதவீதம் பேருடன் அமெரிக்கா நான்காவது இடத்திலும் உள்ளன.

3. மெக்ஸிகோ எல்லையில் எல்லைச் சுவர் தேவை: ட்ரம்ப் திட்டவட்டம்

 • பாதுகாப்பு காரணங்களுக்காக மெக்ஸிகோ எல்லையில் சுவர் தேவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 • இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் , ”நமது பாதுகாப்பு காரணங்களுக்காக மெக்ஸிகோ எல்லையில் சுவர் நிச்சயம் தேவை. மெக்ஸிகோவில் இருந்து பெருமளவிலான போதை மருந்துகள் இங்கு வருவதை தடுக்க இது உதவும்.தற்போது மெக்ஸிகோதான் உலகின் ஆபத்தான நாடாக உள்ளது.சுவர் இல்லை என்றால், எந்த ஒப்பந்தமும் கிடையாது” என்று பதிவிட்டுள்ளார்.

வணிகம்

1.ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு

 • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து உயர்ந்துள்ளது. காலை நேர நிலவரப்படி 63.70 ரூபாயாக இருந்தது
 • அமெரிக்க வங்கிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களை அதிகஅளவு விற்பனை செய்ததால்  மூன்றாவது நாளாக அதன் மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு கண்டது.

2. வி-டைட்டன் நிறுவனத்தில் ஸோகோ நிறுவனர் முதலீடு

 • சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் வி-டைட்டன் நிறுவனத்தில் ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ரூ.60 கோடி முதலீடு செய்துள்ள்ளார்.சென்சார் தொழில்நுட்பத்திலான மருத்துவ கருவிகள் ஆராய்ச்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
 • நேற்று இந்த நிறுவனம் `அக்குப்ளோ’ என்கிற சென்சார் அடிப்படையிலான இன்ஜெக்ஸன் பம்ப் கருவியை அறிமுகம் செய்தது.

3.பார்தி ஏர்டெல் நிகர லாபம் 39% சரிவு

 • பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 39% சரிந்து ரூ.305 கோடியாக இருக்கிறது.கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.503 கோடியாக இருந்தது.
 • வருமானமும் 13% சரிந்து ரூ.20,319 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.23,335 கோடியாக இருந்தது.இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.2.84 அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 0.98% இந்த பங்கு சரிந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது டேட்டா பிரிவு 544% உயர்ந்திருக்கிறது

4. ரூ.5 லட்சம் கோடி மதிப்பை தாண்டியது   ஹெச்டிஎப்சி வங்கி

 • ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியது.இந்த இலக்கை அடைந்த முதல் வங்கி இதுதான்.மேலும் ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு 5 லட்சம் கோடி தாண்டிய மூன்றாவது நிறுவனம் இதுவாகும்.
 • சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.82 லட்சம் கோடியாகும்

5. அடுத்த நிதி ஆண்டு வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும்: இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு

 • அடுத்த நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருக் கும் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.முக்கிய பொருட்களின் விலை குறை வாக இருப்பது மற்றும் நுகர்வு ஆகிய காரணங்களால் இந்த வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணித்திருக்கிறது.நடப்பு நிதி ஆண்டில் 6.5 % வளர்ச்சி இருக் கும் என்றும் கணித்திருக்கிறது.

6. இந்தியாவில் 22,834 கார்களை திரும்பப் பெற ஹோண்டா நிறுவனம் முடிவு

 • உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா 22,834 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
 • ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஹோண்டா அக்கார்டு, ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா ஜாஸ் என பலவித மாடல்களில், ஏரளமான கார்களை அறிமுகம் செய்து வருகிறது. 2013-ம் ஆண்டு மாடல் கார்களில் சிலவற்றில் விபத்தின் போது உயிரைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஏர்பேக் பாதுகாப்பு அம்சம் உரியமுறையில் அமைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
 • இதையடுத்து பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட லட்சக்கணக்கான கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்று வருகிறது.

7. ரிலையன்ஸ் ஜியோ முதல் முறையாக ரூ.504 கோடி நிகர லாபம்: நிறுவனம் தகவல்

 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ முதன் முறையாக ரூ.504 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 • ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் இதனால் 25% அதிகரித்துள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.9,423 கோடியாகும்.
 • அதேபோல் ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்றிய வகையில் இந்த காலாண்டில் பீப்பாய் ஒன்றிற்கு 11.6 டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது.

விளையாட்டு

1. 4 நாடுகள் ஹாக்கியில் இந்திய அணி ஏமாற்றம்

 • 4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
 • நியூஸிலாந்தின் தவுரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதியது. தொடக்கம் முதலே பெல்ஜியம் வீரர்கள் இந்திய அணியின் தற்காப்பு ஆட்டத்துக்கு கடும் சவால் கொடுத்தனர்.4-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் முறியடித்தார்.ஆனால் அடுத்த 4-வது நிமிடத்தில் பெல்ஜியம் தனது முதல் கோலை அடித்தது.

2. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் முகுருசா,     வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி: பெடரர்,   ஜோகோவிச், ஹாலப், ஷரபோவா 3-வது சுற்றுக்கு   முன்னேற்றம்

 • மெல்பர்ன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா, 7-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், 9-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

3. இந்திய அணிக்கு 3-0 என்று கொடுக்க ஆசை: ஏ.பி.டிவில்லியர்ஸ் பேட்டி

 • தன் வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறும் அதிரடி தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ், இந்திய அணியை 3-0 என்று வெல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
 • கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 12/3 என்ற நிலையில் விவ் ரிச்சர்ட்ஸ் ரக இன்னிங்ஸில் புவனேஷ்வர் குமாரை ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து போட்டியை மாற்றிய டிவில்லியர்ஸ், செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் மீண்டும் 80 ரன்களை விரைவு கதியில் எடுத்து வெற்றி வாய்ப்பை தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமாக்கினார் டிவில்லியர்ஸ்.

4. தொடர்ச்சியாக 2 சதங்கள்: விரைவில் 10 ஒருநாள் சதங்கள் எடுத்து ஏரோன் பிஞ்ச் ஆஸி. சாதனை

 • இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தொடர்ச்சியாக 2-வது சதத்தை இன்று எடுத்த ஏரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்களை விரைவில் எடுத்து வார்னரின் ஆஸ்திரேலிய சாதனையை முறியடித்துள்ளார்.
 • பிரிஸ்பனில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியிலும் ஏரோன் பிஞ்ச் சதம் எடுத்தார், 114 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் அடில் ரஷீத்தை லான் ஆன் மீது 105 மீ சிக்ஸ் அடித்து 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பிஞ்ச். ஆஸ்திரேலியா 270 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

5. கப்தில் சதம்: 57/5-லிருந்து முயன்ற பாகிஸ்தான் தோல்வியடைந்து 5-0 ஒயிட்வாஷ்

 • வெலிங்டன் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 5-0 என்று கைப்பற்றியது.

6. ஏரோன் பிஞ்ச் சதம் 2-வது முறையாக வீண்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

 • பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபார வெற்றி பெற்றது.
 • டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய பிஞ்ச் தொடர்ச்சியாக 2வது சதத்தை எடுத்தார், ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பேர்ஸ்டோ, ஹேல்ஸ் அரைசதங்களுடனும் ஜோ ரூட் (46), பட்லர் (42) ஆகியோரது முக்கியப் பங்களிப்புகளினாலும் 44.2 ஓவர்களில் 274/6 என்று வெற்றி பெற்றது.ஆட்ட நாயகனாக 2 விக்கெட்டுகளையும், 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகவும் இருந்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.

7. ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி ஜே.பி.டுமினி சாதனை!

 • தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளார்.
 • நியூலேட்ண்ட்சில் நடைபெற்ற மொமெண்டம் ஒன் டே கப் போட்டியில் டுமினி லெக் ஸ்பின்னர் எடி லீயி என்பவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார்.

ஜனவரி 19 நடப்பு நிகழ்வுகள் pdf வடிவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here