ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள் – விளையாட்டு

0

விளையாட்டு

  1. உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்துக்கு வெண்கலம்
  • உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலம் வென்றார்.
  • ரியாத்தில் கடந்த வாரம் உலக விரைவு செஸ் போட்டி நடைபெற்றது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • அதைத் தொடர்ந்து உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தொடங்கியது. 21 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 9 வெற்றி, 12 ‘டிரா’, ஒரு தோல்வியைச் சந்தித்தார் ஆனந்த். இறுதியில் மொத்தம்5 புள்ளிகள் பெற்றிருந்த அவர் ரஷ்ய வீரர் கர்ஜாகினுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
  • இப்போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்
  1. புதியசுல்தான் ஆஃப் ஸ்விங்குர்பானி அபாரம்: டெல்லியை வீழ்த்தி ரஞ்சிக் கோப்பையை வென்று விதர்பா வரலாறு!
  • டெல்லி அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விதர்பா அணி வெற்றி பெற்று முதன் முதலாக ரஞ்சி சாம்பியன் ஆகி வரலாறு படைத்தது விதர்பா அணி.
  1. செஸ் போட்டியில் ஹரிணி சாம்பியன்
  • திருவாரூரில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியின் ஷிப் போட்டியில் சென்னை வீராங்கனை ஹரிணி மாநில மகளிர் சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார்.
  • திருவாரூரில் கடந்த 2-ம் தேதி தொடங்கி மாநில மகளிர் செஸ்போட்டி நடைபெற்றது. நேற்று 9 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சென்னை.எஸ்.ஹரிணி, திருவள்ளூர் ஒய்.சரண்யா ஆகியோர் எட்டு புள்ளிகள் பெற்றனர். இவர்களில் முன்னேற்ற புள்ளிகள் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த எஸ்.ஹரிணி மாநில மகளிர் சாம்பியன் பட்டத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  1. ஏடிபி டென்னிஸ் சைமன் சாம்பியன்
  • மகாராஷ்டிரா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் கில்லஸ் சைமன் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்றினார்.
  • சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஏடிபி டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு முதல் மகாராஷ்டிர மாநிலம் புனே வில் நடைபெறுகிறது.
  • நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதியாட்டத்தில் முன்னணி வீரரான கில்லஸ் சைமன் 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
  1. தோனி விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்தார் சஹா!
  • கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 130 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் சுருட்டியதில் விக்கெட் கீப்பர் சஹாவின் பங்கு மிக முக்கியமாக அமைந்தது.
  • ஒரு டெஸ்ட் போட்டியில் 10 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வகையில் சஹா புதிய இந்திய சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக 9 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தோனி இந்த டெஸ்ட் சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.
  1. சர்வதேச பனிச்சறுக்கு போட்டி: வெண்கலப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை;
  • சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீராங்கனை அன்சால் தாகூர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
  • சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் அல்பைன் எட்ஜர் 3200 கோப்பைக்கான போட்டி துருக்கியில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மனாலியைச் சேர்ந்த வீராங்கனையான அன்சால் தாகூர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச அளவிலான பனிச்சறுக்கு போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
  1. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்பு
  • எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் இன்று தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள் – விளையாட்டு PDF வடிவம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!