பிப்ரவரி 6 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை விரிவாக்கம் அரசாணை வெளியீடு

  • சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இந்திய அளவில் 2-வது இடம்: தமிழகத்தில் சரக்கு-சேவை வரி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூல்

  • மத்திய அரசு ‘ஒரே தேசம், ஒரே வரி’ என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு-சேவை வரியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி அமல்படுத்தியது.
  • இந்த வரி வருவாயில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுக்கும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
  • இந்தநிலையில் ஜி.எஸ்.டி. மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் மத்திய அரசுக்கு ரூ.9.8 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 34 லட்சம் தொழில் முனைவோர்கள் புதிதாக இணைந்துள்ளனர். ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்தது.

உண்மைத் தன்மையை வாடிக்கையாளர்கள் அறிய எஃப்எஸ்எஸ்ஏஐ நடவடிக்கை:

  • ஆர்கானிக் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய அவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் பிறந்த நாளில் ஊக்கத்தொகை:

  • தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, காமராஜர் பிறந்த நாளில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக பள் ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கு ஒரே நீட் தேர்வு: மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது

  • நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) நடத்தப்படுகிறது. அந்த தேர்வில் தகுதிப் பெறும் மாணவர்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒரு நாள் பயணத்துக்கு பயன்படும் பாஸ் கட்டணம் ரூ.80 ஆக உயர்வு: 

  • மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண பாஸ் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வரும் 8-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளன.

ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைய ரூ. 1.கோடி நிதி: ஸ்டாலின் அறிவிப்பு

  • உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைவதற்கு திமுகவின் பங்களிப்பாக ரூ. 1 கோடி அளிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா

கர்நாடக மாநிலத்திற்கு தனி மூவர்ண கொடி; 9 பேர் கொண்ட குழு பரிந்துரை

  • கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடியை வடிவமைப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியது.  அந்த குழு அதற்கான பரிந்துரை கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.2,548 கோடி ஒதுக்கீடு

  • தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 548 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விற்பனை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் குழப்பம்

  • கடந்த ஆண்டு மே 26-ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில்நுட்ப நிபுணர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது.
  • அதே நேரத்தில் அனைவருக்குமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கும் இவிஎம்-களை விற்பனை செய்யலாம். இந்த வகை இவிஎம்-களை மாநில தேர்தல் ஆணையங்களுக்கும், வெளிநாட்டிலுள்ள தேர்தல் அமைப்புகளுக்கும், இதர நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யலாம் என அந்த சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.

உலகம்

உலகின் பரபரப்பான விமான நிலையம்: துபை முதலிடம்

  • கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் துபை விமான நிலையம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வணிகம்

சர்க்கரை இறக்குமதிக்கு 100% வரி விதிக்க மத்திய உணவு அமைச்சகம் பரிந்துரை

  • கரும்பு விவசாயிகளின் நலன் கருதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு 100% வரி விதிக்க மத்திய உணவு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

அரசு – உச்ச நீதிமன்றம் மோதல்: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்- இந்தியா உதவ நீதிபதிகள் கோரிக்கை

  • அரசு நிர்வாகத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதாக கூறி மாலத்தீவில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அப்துல்லா யாமீன் நேற்றிரவு அறிவித்தார். அதேபோல் அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காண, இந்தியா உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளையாட்டு

உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ்: மானவ் தக்காருக்கு வெள்ளி

  • லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐடிடிஎஃப் உலக ஜூனியர் சர்கியூட் ஃபைனல்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!