Current Affairs – 9th September 2022

0

Current Affairs – 9th September 2022

சர்வதேச செய்திகள்

மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் இந்தியாவுக்கு 132 வது இடம்!!!
 •         ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) அறிக்கையில், 2021 மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI) 191 நாடுகளில் இந்தியா 132வது இடத்தைப் பிடித்துள்ளது.
 •         2020 அறிக்கையில், 189 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 131வது இடத்தில் இருந்தது. நாட்டின் செயல்திறனில் முந்தைய நிலையிலிருந்து ஏற்பட்ட சரிவு, ஆயுட்காலம் வீழ்ச்சியின் காரணமாக நிகழ்ந்தது.
 •         இந்தியாவின் அண்டை நாடுகளில், இலங்கை (73வது), சீனா (79வது), வங்கதேசம் (129வது), பூடான் (127வது) ஆகியவை இந்தியாவை விட மேலேயும், பாகிஸ்தான் (161வது), நேபாளம் (143வது), மியான்மர் (149வது) ஆகியவை மோசமான நிலையிலும் உள்ளன. 2020 அல்லது 2021 இல் சுமார் 90 சதவீத நாடுகள் தங்கள் HDI மதிப்பில் சரிவை பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
HDI RANK COUNTRY VALUE
1 Switzerland 0.962
2 Norway 0.961
3 Iceland 0.959
132 India 0.633
21 America 0.921

 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார், அவருக்கு வயது 96!!!
 •         உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.
 •         எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி ஏப்ரல் 21, 1926 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார்.
 •         1952ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைந்த பின் அரசு பதவிக்கு வந்தவர் எலிசபெத். எலிசபெத் பிரிட்டனை நீண்டகாலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர்.
 •         பிரிட்டன் அரசின் மறைவை அடுத்து இளவரசர் சார்லஸ் (73) அடுத்த அரசாகிறார் அவர் 3 வது சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.பிரிட்டன் வரலாற்றில் வயதான அரசராக சார்லஸ் உள்ளார்.
   • பிரிட்டன் தலைநகரம் – லண்டன்
   • பிரிட்டன் நாட்டின் பிரதமர்  – லிஸ் டிரஸ்
எல்லா நகரங்களுக்கும் 5ஜி சேவை வழங்கவுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு!!!
 •         நாட்டின் அனைத்து நகரங்களிலும் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக  ஏர்டெல் நிறுவனத்தின் . தலைமை செயலதிகாரி திரு. கோபால் விட்டல் தெரிவித்துள்ளார் .
 •         ஒரு மாதத்திற்குள் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து முக்கியமான பெரு நகரங்களிலும் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
 •         “Airtel Thanks” என்ற செயலி மூலம் தங்கள் பகுதிகளில் 5 ஜி சேவையை அறிந்து கொள்ள முடியும்.
 •         5 ஜி தொலைத் தொடர்பு 20 முதல் 30 மடங்கு வரை அதிக வேகத்தில் செயல்படும்.
 •         ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தும் சிம் கார்டுகள் 5 ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
     • ஏர்டெல் நிறுவனத்தை நிறுவியவர்- சுனில் மிட்டல்
பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா , ‘கடமைப்பாதை’ மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை திறந்து வைத்தார்!!!
 •         கர்தவ்யா பாதை என்பது வெறும் செங்கற்கள் மற்றும் கற்களால் ஆன சாலை மட்டுமல்ல, இந்தியாவின் கடந்தகால ஜனநாயகம் மற்றும் எல்லாக் காலக் கொள்கைகளுக்கும் வாழும் உதாரணம் என்று பிரதமர் மோடி கூறினார்.
 •         நேற்று கர்தவ்ய பாதையை திறந்து வைத்து, 28 அடி உயர நேதாஜி சிலையை திறந்து வைத்து பேசிய மோடி, கர்தவ்ய பாதையின் வளர்ச்சியில், எதிர்கால இந்தியாவை பார்க்கலாம்.
 •         கர்தவ்ய பாதையில் உள்ள ஆற்றல், இந்தியாவிற்கு புதிய பார்வையையும், புதிய நம்பிக்கையையும் மக்களுக்கு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வோல்கர் டர்க் நியமனம்!!!
 •         ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூத்த ஐ.நா ஊழியர் வோல்கர் டர்க் ஐ.நா மனித உரிமைகளுக்கான புதிய உயர் ஆணையராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
 •         முன்னாள் ஐ .நா .சபையின் உயர் ஆணையராக இருந்த  மைக்கேல் பேச்லெட் அவர்களை தொடர்ந்து வோல்கர் டர்க் பதவி ஏற்கிறார்.193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. சபை வியாழனன்று ஒருமித்த கருத்துடன் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது,  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க்கை நியமித்தார்.
 •         வோல்கர் டர்க் கூறுகையில், “நான் ஒரு ஆழமான பொறுப்புணர்வை உணர்கிறேன், மேலும் எல்ல இடங்களிலும், அனைவருக்கும் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் வாக்குறுதிகளை முன்னெடுப்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் வழங்குவேன்என்று கூறினார்.
நியூசிலாந்துக்கான புதிய இந்திய தூதர் நியமனம்!!!
 •         நியூசிலாந்து நாட்டுக்கான புதிய வெளியுறவுப் பணி மூத்த அதிகாரியாக நீத்தா பூஷண் நியமிக்கப்பட்டார்.
 •         இந்திய வெளியுறவு பணி அதிகாரியான இவர் தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கான கூடுதல் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
 •         நியூசிலாந்துக்கான இந்திய தூதரக இருந்த முகேஷ் பர்தேசிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு ஜி -20 கூட்டமைப்புக்கான இந்திய செயலகத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை!!!
 •         சுவிட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு களமாடினார். தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் 88.44 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார்.
 •         24 வயதான இந்திய சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா, இப்போது ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் மற்றும் டயமண்ட் லீக் சாம்பியனாக உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.
 •         டயமண்ட் லீக் பைனலில் சோப்ரா மூன்றாவது முறையாக கலந்துக் கொண்டார். 2017 மற்றும் 2018 இல் இந்த போட்டியில் கலந்துக் கொண்டது முறையே ஏழாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
உலகின் முதல் ரோபோ- CEO
 • சீன மெட்டாவர்ஸ் நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் ஒரு ரோபோவை வைத்துள்ளது. ‘செல்வி. TANG-YU’ – AI-
 • இயங்கும் மெய்நிகர் மனித உருவ ரோபோ, நிர்வாக பதவிக்கு தலைமை தாங்கும் உலகின் முதல் ரோபோவாக மாறியுள்ளது. Tang Yu
 • Fujian NetDragon Websoft இன் சுழலும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார்.
 • NetDragon Websoft என்பது ஒரு சீன நிறுவனமாகும், இது மல்டிபிளேயர் ஆன்லைன் கேம்களை உருவாக்கி இயக்குகிறது மற்றும்

முக்கிய தினங்கள்

 தஜிகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று!!!
 •         தஜிகிஸ்தானின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்பட்டது.
 •         கம்யூனிஸ்ட் கட்சி தஜிகிஸ்தானை ஆண்டு வந்தது, 9 செப்டம்பர் 1991 அன்று சோவியத் ஒன்றியம் தஜிகிஸ்தானை சுதந்திர நாடக அறிவித்தது.
 •         தஜிகிஸ்தான் , மத்திய ஆசியாவின் மையத்தில் அமைந்துள்ள நாடு. தஜிகிஸ்தான் வடக்கில் கிர்கிஸ்தான், கிழக்கில் சீனா, தெற்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கில் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றை  எல்லையாக கொண்டுள்ளது.
   •         தலைநகரம்: துஷான்பே
   •         தலைவர்: எமோமாலி ரஹ்மான்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here