கல்பனா சாவ்லா நினைவு தினம் – பிப்ரவரி 1

0

விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி

இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான  ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

  

கல்வி பயணம் :

கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ( Tagore Baal Niketan Senior Secondary School) தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்துவிண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி[[CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார்

முதல் விண்வெளி பயணம் : 

  • கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
  • கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார்.
  • 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவைஅடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார்.
  • கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார்.

இரண்டாம் விண்வெளி பயணம் : 

  • STS-87க்கு பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார்
  • 2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.
  • ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது.
  • கொலம்பியாடிஸ் டெக்சாஸ் மீது பூமியின் வளிமண்டலத்திற்குள் உள்ளே வரும் போது அதன் 28 வது குறிக்கோளை முடிக்க விரைவில் திட்டமிடப்பட்டது

விருதுகள் :

மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:

  • அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)
  • நாசாவின் விண்ணோட்ரப் பதக்க (NASA Space Flight Medal)
  • நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)

கல்பனா விருது :

  • இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறது

கிரகத்தின் பெயர்

  • ஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும், இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர்

இறப்பு :

பிப்ரவரி 1 , 2003ஆம் வருடம் பூமிக்கு இறங்குவதற்கு சுமார் 16 நிமிடங்களுக்கு முன்னர், கொலம்பியாவில் விண்வெளியில் அவர் மற்ற ஆறு குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து கொல்லப்பட்டார் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!