Home நடப்பு நிகழ்வுகள் தினசரி 21 ஜனவரி நடப்பு நிகழ்வுகள்

21 ஜனவரி நடப்பு நிகழ்வுகள்

0

21 ஜனவரி நடப்பு நிகழ்வுகள்

உலகம்

1. சிங்கப்பூரில் நடத்துநர் இல்லாமல் இயங்கும் பேருந்து :

  • சிங்கப்பூரில் நவீன தொழில்நுட்பத்தில் டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு, நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்கிறது. அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு பிறகே இந்தியாவுக்கு வந்தடைகின்றன. சிங்கப்பூரில் ஈசி லிங்க் எனும் நிறுவனம் மூலமாக ஏடிஎம் அட்டை வடிவில் பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் உள்ள டாப்-அப் இயந்திரங்களில் பணத்தை செலுத்தி அட்டையில் சேமித்துக்கொள்ளலாம்.
  • பேருந்தில் ஏறும்போது அங்கு இருக்கும் கருவியில் இந்த பேருந்து அட்டையை காண்பிக்க வேண்டும். அது நாம் ஏறிய இடத்தை குறித்துக்கொள்ளும். பின்னர் நாம் இறங்கும்போது மீண்டும் அந்த அட்டையை கருவி முன்பு காட்ட வேண்டும். அப்போது நாம் பயணித்த தூரத்துக்கான கட்டணம் நமது பேருந்து அட்டையில் இருந்து கழிக்கப்படும்.

2.செவ்வாய் கிரகத்தில் அணுசக்தி பயன்படுத்த அமெரிக்கா திட்டம்

  • தற்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பொதுவாக பூமியை விட்டு சென்ற பின் மனிதர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை மின்சாரம். மனிதர்களின் எரிபொருள் தேவையை அங்கு பூர்த்தி செய்வது மிகவும் கடினம். தற்போது நாசா அமைப்பு அதற்கு பெரிய தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
  • விண்வெளியில் குறிப்பாக செவ்வாய்க்கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிகநேரம் இருக்க புதிய அணுசக்தி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்தகருவியின் முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்தகருவியின் மூலம் 10க்கும் அதிகமான கிலோ வாட் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்து உள்ளது

 இந்தியா

1. குற்றவாளிகளை அடையாளம் காண திருமலையில் செல்போன் ‘செயலி’ :

  • திருமலையில் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணபதற்காக வரும் 24-ம் தேதி ஒரு செல்போன் ‘செயலி’யை அறிமுகம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
  • பாதுகாப்பு கருதி 600 கண்காணிப்பு ஊழியர்களுக்கு குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து கொள்ளும் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், கள்ளச்சந்தையில் லட்டு, தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் வழங்கும் தரகர்கள், திருட்டு தொழிலில் ஈடுபடுவோரின் முகம் இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
  • இதன் மூலம் இவர்களில் பழைய குற்றவாளிகளும் கண்டறியப்படுவர். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் அதிக அளவில் பொருத்தப்படும். இந்த நடவடிக்கைகளால் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தகுந்து பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

2. சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் தடம் பதிக்கும் இந்தியா :

  • சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் தடம் பதிக்கும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
  • 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்ட  வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் நம்முடைய ராக்கெட் மூலம் இஸ்ரோ வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. (இஸ்ரோ) உலக அளவில் சிறந்த 10 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை கண்காணித்தல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற பயன்பாடுகளுக்காக செயற்கைக்கோள்களை தயாரித்து இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
  • வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் மைக்ரோ மற்றும் நானோ வகையைச் சேர்ந்த சிறிய ரக செயற்கைக் கோள்கள் ஆகும். இவற்றை நம்முடைய பிரதான பெரிய செயற்கைக் கோளுடன் சேர்த்து ஒரே ராக்கெட்டில் செலுத்தும்போது ராக்கெட்டின் உற்பத்தி செலவு குறையும். வருவாயும் கிடைக்கும். இந்த வருவாயை கொண்டு இஸ்ரோ தனது விண்வெளி ஆராய்ச்சி பணிகளை இன்னும் தீவிரப்படுத்த முடியும்.

தமிழகம்

1. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

  • குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. அதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • விமான நிலையத்துக்குள்ளும், வெளியேயும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 30-ம் தேதி வரை இந்தப் பாதுகாப்பு அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

2. ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு :

  • உயர்நிலை அதிகாரிகள் குழு பரிந்துரையின்படி, இனி ஆண்டுதோறும் அல்லது தேவை ஏற்படும்போது பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • சிறப்பு பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைப் போல ஒன்றரை மடங்கு மிகாமல் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய மாநில அரசுகள் உத்தரவிடும்போது பேருந்து கட்டணங்களுடன் கூடுதலாக சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. கடலோர படைக்கு நவீன ரோந்து கப்பல் :

  • எல் அண்ட் டி நிறுவனம் 2 நவீன ரக ரோந்துக் கப்பல் தயாரித்து இந்தியக் கடலோர காவல்படையிடம் வழங்கப்பட்டது. 98 மீட்டர் நீளமும், 14.8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரோந்துக் கப்பல் 2,100 டன் எடை கொண்டதாகும்.
  • அதிகபட்சமாக 26 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக் கூடிய இந்தக் கப்பல், ஹெலிகாப்டர்களை கையாளும் திறன் பெற்றது. 30 எம்எம் தானியங்கி துப்பாக்கி, நவீன ரக ரேடார்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.

வணிகம்

1. மும்பையில் ஒன்பிளஸ் விற்பனையகம்

  • சீனாவின் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது அங்கீகாரம் பெற்ற விற்பனையகத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
  • ஆன்லைன் மூலம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிப்பதற்காக முதலாவது விற்பனையகத்தைத் தொடங்குவதாக ஒன்பிளஸ் இந்தியாவின் பொது மேலாளர் விகாஸ் அகர்வால் தெரிவித்தார். இந்த விற்பனையகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாக் உள்ளவரை அவர்கள் வாங்கும் ஸ்மார்ட் போனுடன் `புல்லட் வி2’ இயர்போன் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

2. ஹெச்பிசிஎல்லின் 51% பங்குகளை வாங்கியது ஓஎன்ஜிசி :

  • பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓஎன்ஜிசி) நிறுவனம் மற்றொரு அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்தில் அரசுக்குள்ள 51 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ. 36,915 கோடியாகும்.
  • ஒரே தவணையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிமாற்றம் மூலம் பங்கு விலக்கல் மூலம் அரசு நடப்பு நிதி ஆண்டில் எட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ 72,500 கோடியை அரசு எட்டிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • அரசின் 51.11 சதவீத பங்குகளை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு விற்பதென்று உத்திசார் அடிப்படையில் மத்திய அரசு முடிவு செய்து அதன்படி பங்குகளின் விலை ரூ 36,915 கோடி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.ஹெச்பிசிஎல் நிறுவனம் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே செயல்படும்.

விளையாட்டு

1. 4 நாடுகள் ஹாக்கி தொடர்: இறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்தியா – கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது

  • 4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
  • நியூஸிலாந்தின் தவுரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதேவேளையில் 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியிடம் 2-0 என தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நேற்று நியூஸிலாந்துடன் மோதியது
  • இந்திய அணியின் பயிற்சியாளர் மரிஜென் கூறும்போது,“நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினோம். தனிப்பட்ட முறையில் வீரர்களிடம் முன்னேற்றம் இருந்தது. இந்த ஆட்டத்துக்கு முன்னதாக நாங்கள் அதிகளவில் பகுப்பாய்வுசெய்தோம்”என்றார்.இந்த வெற்றியால் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

2. டி20 கிரிக்கெட்: ரிஷப் பந்த் அதிரடியால் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது டெல்லி 

  • கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் பரத் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பரத் ஷங்கர் 17 பந்தில் 24 ரன்கள் எடுத்தும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
  • பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி இறங்கியது. காம்பீர், ரிஷப் பந்த் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். காம்பீர் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 33 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷோரே 28 ரன்னும், ராணா 14 பந்தில் 34 ரன்களும் விளாச டெல்லி அணி 15.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3. தேசிய சீனியர் கூடைப்பந்து: பஞ்சாப், உத்தரகாண்ட்   காலிறுதிக்கு தகுதி 

  • தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் அரைஸ் ஸ்டீல் நிறுவன ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த தமிழக ஆண்கள் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியன் ரெயில்வே, பஞ்சாப், அரியானா, குஜராத் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
  • கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கர் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இருந்து காலிறுதிக்கு தகுதி பெற்றன. மத்திய பிரதேச அணி வெளியேற்றப்படுகிறது.

ஜனவரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!