நடப்பு நிகழ்வுகள் – 01 பிப்ரவரி 2023!

0
நடப்பு நிகழ்வுகள் - 01 பிப்ரவரி 2023!
நடப்பு நிகழ்வுகள் - 01 பிப்ரவரி 2023!

தேசிய செய்திகள்

G20 இன் முதல் நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் அசாமில் நடைபெறவுள்ளது

  • இந்தியாவின் G20 பிரசிடென்சியின் கீழ் முதல் நிலையான நிதிப் பணிக்குழு (SFWG) கூட்டம் பிப்ரவரி 2 மற்றும் 3, 2023 முதல் குவஹாத்தி அசாமில் நடைபெறவுள்ளது.
  • உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்கும், பசுமையான, அதிக மீள்தன்மை மற்றும் உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை நோக்கிய மாற்றங்களை ஊக்குவிப்பதற்கும் நிலையான நிதியைத் திரட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்பு (AISHE) 2020-21- ம் ஆண்டின்  அறிக்கை வெளியிட்டுள்ளது

  • நாட்டிலுள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களின் அமைவிடம், மாணவா் சோ்க்கை, பணிபுரியும் ஆசிரியா்கள் விவரம், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி தொடா்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து உயா்கல்விக்கான கணக்கெடுப்பு கல்வி அமைச்சகத்தால் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
  • இக்கணக்கெடுப்பில்
கல்லூரிகளின் எண்ணிக்கையில் முதல் 10 இடம் பிடித்த மாநிலங்கள்
2019-20ல் 1,043 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 2020-21ல் 70 உயர்ந்து, 2020-21ல் 1,113ஆக அதிகரித்துள்ளது.
1.உத்தரப் பிரதேசம், 6. மத்தியப் பிரதேசம்,
2.மகாராஷ்டிரா, 7.ஆந்திரப் பிரதேசம்,
3.கர்நாடகா, 8.குஜராத்,
4.ராஜஸ்தான், 9.தெலுங்கானா,
5.தமிழ்நாடு, 10.கேரளா
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் முதல் 6 இடம் பிடித்த மாநிலங்கள்
உயர்கல்வியில் மொத்த சேர்க்கை: 2019-20ல் 3.85 கோடியாக இருந்த (28.80 லட்சம் அதிகரிப்பு) 2020-21ல் கிட்டத்தட்ட 4.13 கோடியாக அதிகரித்துள்ளது.
1.உத்தரப் பிரதேசம் 6.ராஜஸ்தான்
2.மகாராஷ்டிரா
3.தமிழ்நாடு
4.மத்தியப் பிரதேசம்
5.கர்நாடகா

 

 தேசிய மகளிர் ஆணையத்தின் நிறுவன தினம்

  • தேசிய மகளிர் ஆணையம் 31 ஜனவரி 1992 அன்று ஜெயந்தி பட்நாயக் தலைமையில் உருவாக்கப்பட்டது, 2023 இல், புதுதில்லியில் 31வது நிறுவன தினத்தைக் கொண்டாடும் வகையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1, 2023 வரை இரண்டு நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது.
  • இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் ‘சஷக்த் நாரி சஷக்த் பாரத்’ ஆகும், இது அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் சிறந்து விளங்கும் மற்றும் அழியாத முத்திரையை பதித்த பெண்களின் வெற்றியை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

மாநில செய்திகள்

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் மாற்றப்பட்டுள்ளது 

  • கடந்த 2014 ஜூன் மாதம் ஆந்திரம், தெலங்கானா மாநிலப் பிரிவினைக்குப் பின்னர், ஆந்திர முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்தார்.
  • தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றப்பட்டுள்ளது என அம்மாநிலத்தின் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி புது தில்லியில் 31 ஜனவரி 2023 அன்று நடைபெற்ற சர்வதேச தூதரகக் கூட்டமைப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.

BioAsia 2023 இன் 20வது பதிப்பு தெலுங்கானாவில் நடைபெறவுள்ளது

  • BioAsia என்பது இந்திய அரசு மற்றும் ஆசிய பயோடெக் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து தெலுங்கானா அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சர்வதேச வணிக மாநாடு ஆகும்.
  • தற்போது 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அமீரகம் BioAsia 2023 இல் இணைந்துள்ளது; மற்றும் தெலுங்கானா அரசாங்கத்தின் இந்த இந்திய வாழ்க்கை அறிவியல் தொழில்துறை நிகழ்வு ஹைதராபாத்தில் பிப்ரவரி 24-26, 2023 வரை நடைபெறவுள்ளது.

பொருளாதார செய்திகள்

பொருளாதார ஆய்வறிக்கை-2023

  • பொருளாதார ஆய்வறிக்கை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் 31 ஜனவரி 2023 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டது, 2022-23 பொருளாதார ஆய்வு, அடுத்த 2022-23ல் அடிப்படை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆய்வறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் உண்மையான அளவில் 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் மேலும், உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NSE, தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் மிகப்பெரிய டெரிவேடிவ் சந்தையாகவுள்ளது

  • ஃபியூச்சர்ஸ் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் (எஃப்ஐஏ) 2022 ஆம் ஆண்டில் வர்த்தகம் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மீண்டும் உலகின் மிகப்பெரிய டெரிவேடிவ்கள் சந்தையாகவுள்ளது.
  • மேலும் உலக பரிவர்த்தனைகளின் கூட்டமைப்பு (WFE) வழங்கிய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் பங்குகள் பிரிவில் வர்த்தகங்களின் எண்ணிக்கையில் (எலக்ட்ரானிக் ஆர்டர் புக்) NSE மூன்றாவது இடத்தைப் பிடித்ததுள்ளது.

நியமனங்கள்

NALCO வின் புதிய இயக்குனர் நியமனம்

  • பங்கஜ் குமார் சர்மா தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ) இயக்குநராக (உற்பத்தி பிரிவில் )ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 01.2023 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு சுரங்க அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது; முன்னதாக பங்கஜ் குமார் சர்மா என்எம்டிசி(NMDC) லிமிடெட் தலைமை பொது மேலாளராக (சிஜிஎம்) பணியாற்றியுள்ளார்.

இந்திய விமானப்படையின் புதிய துணைத் தலைவர் நியமனம்

  • ஏர் மார்ஷல் ஏ பி சிங் இந்திய விமானப்படையின் புதிய துணைத் தலைவராக ஜனவரி 30, 2023 அன்று நியமிக்கப்பட்டார். ஜனவரி 31, 2023 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் ஏர் மார்ஷல் சந்தீப் சிங்-ஐ தொடர்ந்து அவர் பதவியேற்கிறார்.
  • முன்னதாக ஏர் மார்ஷல் ஏ பி சிங், மத்திய விமானப் படையின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றியவர். அவர் 1 பிப்ரவரி 2023 அன்று துணைத் தலைவராகப் பொறுப்பேற்பார், மேலும் அவர் டிசம்பர் 21, 1984 இல் IAF இன் போர் ஸ்ட்ரீமில் நியமிக்கப்பட்டார்.

தொல்லியல் ஆய்வுகள்

இங்கிலாந்தின் ஜுராசிக் கடற்கரையில் புதிய பழங்காலகடல் முதலைபுதைவடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது

  • Turnersuchus hingleyae இன் கண்டுபிடிப்பு, ஐக்கிய நாடுகளின் , டோர்செட் பகுதியில் உள்ள ஜுராசிக் கடற்கரையில், தலை, முதுகெலும்பு மற்றும் கைகால்களின் ஒரு பகுதி உட்பட புதைபடிவங்களின் கண்டுபிடிக்கப்பட்டது.
  • Turnersuchus hingleyae இன் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் அதன் வயதுடைய ஒரே முழுமையான தலட்டோசூசியனைக் குறிக்கின்றன மற்றும் ஆரம்பகால ஜுராசிக், காலத்தைச் சேர்ந்தவை, மேலும் இது சுமார் 185 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டது ஆகும்.

விருதுகள்

2023-ம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் வெற்றி பெற்றவர்கள்

  • தில்லி குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவில் குடியரசு தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் அணிவகுப்புகளில் மிகப்பெரியது மற்றும் முக்கியமானது, இந்த அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று புது தில்லியின் கர்தவ்யா பாதையில் நடைபெறுகிறது.
  • 2023-ம் ஆண்டில் நடைபெற்ற 17 மாநிலங்களின் அணிவகுப்பில் சிறந்த மாநில ஊர்தியாக உத்தரகாண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, மேலும் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்தையும் வென்றுள்ளது.

புத்தக வெளியீடு

மேகநாத் தேசாய்அரசியல் பொருளாதாரத்தின் வறுமைஎன்ற தலைப்பில் ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்

  • இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய் “The Poverty Of Political Economy: How Economics Abandoned the Poor” என்ற புதிய புத்தகத்தை எழுதியுள்ளார், மேலும் இந்த புத்தகத்தை HarperCollins Publishers India வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புத்தகத்திலிருந்து, மேக்நாத் தேசாய், ஆடம் ஸ்மித் முதல் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் பொருளாதாரத்தின் பங்களிப்புகளையும்,மற்றும் பெரும் மந்தநிலையிலிருந்து லெஹ்மன் பிரதர்ஸின் சரிவு வரையிலும் விளக்கியுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை

  • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்,
    • நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7,070 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
    • ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6,730 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்துள்ளார்.
    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் உயர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
  • பெண்கள் தரவரிசை பட்டியலில்
    • போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் இடம் பிடித்துள்ளார்.
    • பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 2-வது இடம் பிடித்துள்ளார்.
    • துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

85வது டாடா ஸ்டீல் செஸ் போட்டி

  • டாடா ஸ்டீல் செஸ் போட்டி 2023 என்பது நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ இல் நடைபெறும் வருடாந்திர சதுரங்கப் போட்டியின் 85வது பதிப்பாகும். இபோட்டி 13 ஜனவரி முதல் 29 ஜனவரி 2023 வரை நடைபெற்றது.
  • அந்த போட்டியில் அனிஷ் கிரி, ரிச்சர்ட் ராப்போர்ட்டை தோற்கடித்து டாடா ஸ்டீல் செஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

முக்கிய தினம்

இந்திய கடலோர காவல்படை தினம் 2023

  • இந்திய கடலோரக் காவல்படை தினம், இந்திய கடலோர சேவைகள் மற்றும் அவர்களின் பங்களிப்பையும் சாதனையையும் அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும் மற்றும் கடல் வழியாக கடத்தலைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!