ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 31, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 31, 2018

  • Data Privacy Day & Data Protection Day ஜனவரி 28 அனுசரிக்கப்படுகிறது. தனியுரிமையை மதிப்பிடுவது, தரவரிசைகளை பாதுகாப்பது ஆகிய கருத்தாகும்.
  • ஹேக்கர்களிடமிருந்து உலகை பாதுகாக்க உலகப் பொருளாதார மன்றம் (WEF) எந்த சர்வதேச அமைப்பு உலகளாவிய இணைய பாதுகாப்பு மையத்தை தொடங்கியுள்ளது.
  • 2018ம் ஆண்டிற்கான சர்வதேச போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 88 வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலை உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து கொலாம்பியா பல்கலைக் கழகங்கள் தயாரித்துள்ளன. இதில் 1 st சுவிட்சர்லாந்து, 2 nd சிங்கப்பூர்.
  • ISRO வின் திரவ உந்துதல் அமைப்பு மையத்தின் (LPSC) புதிய இயக்குநராக V  நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். ( Liquid Propulsion System‟s Centre – LPSC )
  • இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) முதல் பெண் தலைவர் உஷா அனந்த் சுப்பிரமணியன். இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) முதல் பெண் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • மிதக்கும் சந்தை அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மெட்ரோ நகரம் கொல்கத்தா ஆகும். சுமார் 400 m  நீளம் 60m  அகலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பினால் (WHO) முன் தகுதிச் சான்று பெற்றுள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் ரோபோவாக் ( Rotavac ) தடுப்பூசிக்கு கிடைத்துள்ளது.
  • மத்திய அரசின் முதியோர் ஒய்வூதியத்திட்டமான “அடல் ஓய்வூதியத் திட்டம் APY – திட்டத்தின் சேவை இனி சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் பேமண்ட் வங்கிகளிலும் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இடர்பாட்டு பிரிவுகளுக்காக “மகாத்மா காந்தி சர்பத் விகாஸ் திட்டத்தை” அறிமுகம் செய்துள்ள மாநிலம் பஞ்சாப் ஆகும்.
  • புதுச்சேரி அரசும், பிரான்ஸ் நாடும் இணைந்து நடத்தும் சர்வதேச பாய்மர படகு போட்டி புதுச்சேரியில்தொடங்கியுள்ளது. இதில் 74 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில் ரூ. 594 கோடியில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிலையம் விரைவில் தொடங்கப்படும் என்று சுகதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!