ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 25, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 25, 2018

  • சார்ஜாவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
  • N DRF – National Disaster Response Force தனது 13 வது ஆண்டு தொடக்கவிழாவினை டெல்லியில் கொண்டாடியது. இதில் தேசிய உளவுத் துறை இயக்குனர் (IB) ராஜீவ் ஜெயின் கலந்து கொண்டார்.
  • “The Heartfulness Way” எனும் புத்தகத்தின் ஆசிரியர் கமலேஷ் R படேல் ஆவார். இந்த புத்தகத்தை டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டார்.
  • இந்தியாவின் சர்வதேச அறிவியல் திருவிழாவின் 4 வது பதிப்பு உத்திரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. (4th International Science Festival) ) இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஹர்சவர்ததன் தொடங்கிவைத்தார்.
  • இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகள் பட்டியிலில் மொரீசியஸ் (FDI) முதலீடம் பிடித்துள்ளது. 2 வது USA மற்றும் 3 வது UK உள்ளது.
  • சர்வதேச அளவிலான பொருளாதார மாநாடு ( World Economic Forum Conference ) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி பங்கு பெற்று உரையாற்றினார்.
  • விமானப் பயணத்தின் போது பயணிகள் மொபைல் பேசவும் இண்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதியளிக்கலாம் என டிராய் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.
  • மத்திய பட்ஜெட்டில் சாலை திட்டப் பணிகளுக்காக 1.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • ஆ.ராசா எழுதிய ““தி 2பு சாகா அன்ஃபோல்ட்ஸ்”” என்ற புத்தகத்தை டெல்லியில் ஃபரூக் அப்துல்லா (ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்) வெளியிட்டார்.
  • புது டெல்லியில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை 2017 – 18 போட்டியில் கிரிஷ் ஆர் கௌடா (கர்நாடகம்) வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
  • சார்ஜாவில் நடைபெற்ற பார்வை அற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன்  பட்டம் பெற்றுள்ளது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!