ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 22, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 22, 2018

  • 2005 – 2015 ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு (ஹரிந்தர் மாலி மற்றும் இந்திரா நாயுடு) அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
  • உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனை ஜோஸ்ஃபெல்லா நினைவு மருத்துவமனை – மணிலா (பிலிப்பைன்ஸ்)
  • வேலைக்காக குவைத் நாட்டுக்கு செல்ல பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
  • ஐரோப்பியாவை ஃபியான் புயல் தாக்கியது.
  • சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகள் தடைக்கு பின்னர் திறக்கப்பட்ட திரையரங்குகளில் முதல் படமாக “இமோஜி” திரைப்படம் திரையிடப்பட்டது.
  • சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் (நிக்லஸ் சாமுவேல் குக்ஜர் – வறுமையின் காரணமாக தத்து கொடுப்பட்டவர்) MP யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 2018 ம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • வனப்பகுதியை இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்திய சுகாதாரக் கூட்டமைப்பான “NAT HEALTH” அனைவருக்கும் கட்டாய மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யவுள்ளது.
  • புதியதாக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்து கப்பலான ‘விஜயா’ இந்திய கடலோர காவற்படையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
  • தாஜ்மஹாலை காண இனி நாள்தோறும் 40,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
  • மத்திய அரசின் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் தமிழகத்தில் – ஈரோடு உள்பட 9 புதிய நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!