ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 27, 2018

1

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 27, 2018

  • ‘‘INS கங்கா’ போர்க்கப்பல் 22.03.18 அன்று இந்திய கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றது. 1985-ம் ஆண்டு இணைக்கப்பட்ட இந்தக் கப்பல் மும்பை மஷகண்டக் லிமிடட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
  • போர்விமானத்தை தனியே ஓட்டிச்சென்ற 2-வது இந்திய பெண்மணி என்ற பெருமையை பாவனா காந்த் படைத்துள்ளார். MIC21 ரக விமானங்களை இயக்கி இச்சாதனை படைத்துள்ளார்.
  • IBM நிறுவனம் ‘உப்புத் தூள்’ அளவில் இருக்கும் உலகிலேயே சிறிய கணினியை கண்டுபிடித்து இருக்கிறது. இதன் அளவு 1mm அகலம் 1mm நீளம் கொண்டது. எல்லா சிப்களும் நானோ தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் 25 இடங்களின் பட்டியலில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி 22-வது இடத்தைப் பெற்றுள்ளது. ஆசியா அளவில் டெல்லி 8-வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் இடத்தை உலக அளவில் பிரான்ஸ் பாரிஸ் பெற்றுள்ளது. வெளியிட்ட அமைப்பு Tripadvisor.
  • Skytrax என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக தொடர்ந்து 6-வது ஆண்டாக சிங்கப்பூரில் உள்ள சாங்கி (changi) விமானநிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மும்பை சந்திரபதி சிவாஜி டெர்மினல் 63-வது இடம் பெற்றுள்ளது.
  • பூச்சியியல் நோய்களை அழிக்க மருந்து கண்டுபிடித்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழக துணைவேந்தர் முருகனுக்கு ‘கேரியர்- 360° பேராசிரியர் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.
  • கரம் பூரி (Krem Puri) என்ற பெயரிலான உலகின் மிக நீளமான ‘மணற்பாறை குன்று’ (Sandstone cave) மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மணற்பாறைக் குகையானது 24583 அடி நீளமுடையது.
  • ஆந்திராவில் ‘கிரியா’ உதாரண பல்கலைக்கழகம் RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இண்டஸ் இண்ட் வங்கி தலைவர் சேஷாயி மகேந்திர குழும தலைவர் ஆனந்த மஹிந்திரா உட்பட பல கார்பரேட் நிறுவன அதிர்பர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.
  • செயற்கைக் கோளுக்கான லித்தியம் – அயன்பேட்டரி உற்பத்தி. ‘பெல் நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம்.
  • 4-நாள் சுற்றுப் பயணமாக ஜெர்மன் அதிபர்ஃபிராங் வால்டர் ஸ்டென்மெய்ர் இந்தியா வந்துள்ளார்.
  • ‘சிம்பொனி ஆப் த சீஸ்’ (Sympony us the Sea) என்ற பெயரிலான உலகின் மிகப்பெரிய கப்பல் பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து அமெரிக்காவின் ராயல் குரூஸ் லிமிடட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

PDF Download

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!