மே 4 நடப்பு நிகழ்வுகள்

0

மே 4 நடப்பு நிகழ்வுகள்

மே 4 சர்வதேச தீயணைப்புப் படையினர் தினம்

மாநிலம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா

  •  வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கல்வித் திட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.

எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு – 4 ஆவது பிராந்திய மாநாடு, பெங்களூர்

  • இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் நிதி அமைச்சகமும், வளரும் நாடுகளுக்கான ஆய்வு மற்றும் தகவல் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு தொடர்பான 4 ஆவது பிராந்திய மாநாடு பெங்களூரில் 04.05.2018 நிறைவடைந்தது.

தேசியசெய்திகள்

சரக்கு மற்றும் சேவை வரி 27-வது கூட்டம்

  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் அமைப்பின் 27-வது கூட்டம் 04.05.2018 நடைபெற உள்ளது.
  • ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் எளிமையான முறைகளை செயல்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
  • மாதந்தோறும் தாக்கல் செய்வதற்கு பதிலாக காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்வது குறித்த பரிந்துரையும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.

நமாமி கங்கை திட்டத்தைப் பலப்படுத்த புவி தகவல் முறை

  • புவி தகவல் முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கங்கை புனரமைப்புப் பணியைச் செயல்படுத்துமாறு தூய்மை கங்கைக்கான தேசியச் செயல்திட்டம்,1767 இல் அமைக்கப்பட்ட மிகப் பழமையான அறிவியல் துறையான சர்வே ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளது.

துணை ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு பயணம்

  • வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக வருகிற 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

ரேபிஸ் நோயை ஒழிக்க நடவடிக்கை – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

  • ரேபிஸ் நோயை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச செய்திகள்

அமெரிக்காவில் இடைக்கால நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

  • நியூயார்க் நகர சிவில் நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தீபா அம்பேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் அமெரிக்காவில் நீதிபதியாகியுள்ள இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையையும் தீபா அம்பேகர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக அமெரிக்காவில் 2015ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்மயமாக்கலை இந்தியா நன்றாக பயன்படுத்துகிறது இந்திய அரசுக்கு உலக வங்கி பாராட்டு

  • நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதம் மின்மயமாக்கலை இந்தியாவில் “மிகவும் நன்றாக” பயன்படுத்தப்படுகிறது என்று உலக வங்கி பாராட்டு தெரிவித்து உள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது –  ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு

  • இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு ஸ்வீடன் நாட்டின் இலக்கிய  மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

வணிகசெய்திகள்

இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் வகையில் சீன அரசாங்கம் இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.

  • புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட 28 மருந்துகளுக்கான இறக்குமதி வரியை சீனா நீக்கியிருப்பதால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை குறைய வாய்ப்பு உள்ளது.

இண்டிகோ பங்குகள் 18% சரிவு

  • இன்ஜினில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக சமீபத்தில் 11 (ஏர்பஸ் ஏ320) விமானங்களை தனது சேவையிலிருந்து இண்டிகோ நிறுவனம் விலக்கிக்கொண்டது.
  • இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) நிறுவனத்தின் பங்குகள் 17.57 சதவீதம் சரிவு.

விளையாட்டுசெய்திகள்

பேட்மிண்டன்

  • நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்

கால்பந்து

  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 3-வது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரியல் மாட்ரிட் சாதனை படைத்துள்ளது.
  • இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தினால் தொடர்ச்சியாக 3-வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைக்கும்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!